கொழும்பில் நாளை முதல் விசேட போக்குவரத்து திட்டம்.

Date:

20 க்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் நடைபெறும் காலப்பகுதியில் கொழும்பு நகரை மையமாகக் கொண்டு விசேட போக்குவரத்துத் திட்டமொன்றை நடைமுறைப்படுத்தவுள்ளதாகக் கொழும்பு போக்குவரத்துப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, நாளை (7) முதல் மார்ச் 8 ஆம் திகதி வரை போட்டி நடைபெறும் காலப்பகுதியில், மாளிகாவத்தை ஆர். பிரேமதாச விளையாட்டரங்கம் மற்றும் கறுவாத்தோட்டம் SSC விளையாட்டரங்கம் ஆகியவற்றை அண்டிய பகுதிகளில் இந்தப் போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்படும்.

இக்காலப்பகுதியில் குறித்த மைதானங்களில் நடைபெறும் போட்டிகளைக் காண்பதற்காக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ரசிகர்கள் பெருந்திரளாக வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், அப்போட்டிகள் நடைபெறும் நாட்களுக்கு ஏற்றவாறு இதனை நடைமுறைப்படுத்தக் கொழும்பு போக்குவரத்துப் பிரிவு திட்டமிட்டுள்ளது.

Popular

More like this
Related

நாட்டின் பல மாகாணங்களுக்கு கடும் வெப்பம் குறித்த எச்சரிக்கை

நாளை (21) நாட்டின் பல மாகாணங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின்...

புத்தாண்டு காலத்தில் அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் 441 மில்லியன் ரூபாவிற்கும் அதிக வருமானம்

சித்திரை புத்தாண்டு காலப்பகுதியை முன்னிட்டு ஏப்ரல் 10 முதல் 18 ஆம்...

புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் பத்திரங்கள் கையளிப்பு

இலங்கைக்காக நியமிக்கப்பட்டுள்ள நான்கு புதிய தூதுவர்கள் மற்றும் இரண்டு உயர்ஸ்தானிகர்கள் இன்று...

அதிக கட்டணத்தை அறவிடும் மற்றும் பயணச் சீட்டுக்கள் வழங்காத பஸ்களை முறையிட 1955 தொலைபேசி இலக்கம்

அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தை விட அதிக கட்டணத்தை அறவிடும் மற்றும் பயணச்...