துருக்கி ஜனாதிபதி அர்தூகான் சவூதி விஜயம்: இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் ஒரு புதிய மைல்கல்.

Date:

செவ்வாய்க்கிழமை (03,) அன்று ரியாத் நகருக்கு துருக்கி ஜனாதிபதி ரசப் தையிப் அர்தூகான் மேற்கொண்ட அதிகாரப்பூர்வ விஜயம், சவூதி அரேபிய ஊடகங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

 அர்தூகான்  மற்றும் சவூதி  இளவரசர் முகமது பின் சல்மான் ஆகியோருக்கு இடையேயான சந்திப்பில், இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவது மற்றும் பிராந்திய அரசியல் முன்னேற்றங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

மேலும், இரு நாடுகளுக்கும் இடையிலான கூட்டு முதலீட்டு மன்றம் (Joint Investment Forum) மூலம் பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

துருக்கிய நிறுவனங்களின் நேரடி முதலீடு சவுதியில் $2 பில்லியனைத் தாண்டியுள்ளது என்பதை அந்த இதழ் சுட்டிக்காட்டியுள்ளது.

சவூதி முதலீட்டு அமைச்சர் காலித் அல்-ஃபாலிஹ் கூறுகையில், சவூதி மற்றும் துருக்கி ஆகிய இரு நாடுகளும் இணைந்து இப்பிராந்தியத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 50 சதவீதத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் குறிப்பிட்டார்.

இதன் மூலம் பொருளாதார ரீதியாக இரு நாடுகளும் எவ்வளவு வலிமையானவை என்பது வெளிப்படுகிறது.

‘அல்-ரியாத்’ (Al-Riyadh) நாளிதழ், “உறுதியான நெருக்கம்” (Firm Rapprochement) என்ற தலைப்பில் எழுதிய தலையங்கத்தில், சவூதி -துருக்கி இடையேயான உறவு அரசியல், பொருளாதாரம் மற்றும் பாதுகாப்புத் துறைகளில் ஆழமான மற்றும் வளர்ந்து வரும் கூட்டாண்மையை வெளிப்படுத்துவதாகக் கூறியுள்ளது.

Popular

More like this
Related

அஸ்வெசும நிதி நாளை மறுதினம் வங்கிக் கணக்குகளுக்கு!

அஸ்வெசும நலன்புரித் திட்டத்திற்கான நிதி நாளை மறுதினம் (19) பயனாளி குடும்பங்களின்...

வங்கிக் கணக்குகளை குறிவைத்து புதிய மோசடி; மக்களை எச்சரிக்கும் SLCERT!

இணையம் மற்றும் தொலைபேசி ஊடாக இடம்பெறும் பல்வேறு மோசடி நடவடிக்கைகள் குறித்து...

பட்டம் விடுவதால் ஏற்படும் அனர்த்தங்கள்: பிள்ளைகளின் பாதுகாப்பில் கூடுதல் அக்கறை அவசியம்!

பாடசாலை விடுமுறையிலுள்ள மாணவர்களின் பாதுகாப்பு குறித்து விசேட கவனம் செலுத்த வேண்டுமென...

நீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு பொதுமக்களிடம் கோரிக்கை!

வறட்சியான வானிலை நிலவியபோதிலும், நாடளாவிய ரீதியில் தற்போது தடையற்ற நீர் விநியோகம்...