நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழையற்ற வானிலை நிலவும்

Date:

இன்றையதினம் (26) நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக மழையற்ற வானிலை நிலவும் என, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

மேல் மாகாணத்தின் கரையோரப் பிரதேசங்களில் காலை வேளையில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 

தென் மாகாணத்திலும் இரத்தினபுரி மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

 

மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல், வடமத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை, மொனராகலை, மன்னார், வவுனியா மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாகப் பலத்த காற்று மற்றும் மின்னலால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பிரதானமாக மழையற்ற வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

காங்கேசந்துறையிலிருந்து மட்டக்களப்பு ஊடாக அம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக் கூடும்.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் காற்றானது வடமேற்கு திசையிலிருந்து அல்லது மாறுபட்ட திசைகளிலிருந்து வீசக் கூடும்.

காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகள் மிதமான அலையுடன் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசும், கடல் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

சாதாரண தரப் பரீட்சை இன்றுடன் நிறைவு: பரீட்சைக்குப் பின் மோதல்களைத் தவிர்க்க நடவடிக்கை

கடந்த 17ஆம் திகதி ஆரம்பித்த O/L பரீட்சை இன்று (26) நிறைவடையவுள்ளது. O/L...

பிரதமர் மோடி, இஸ்ரேல் நாடாளுமன்றத்தின் உயரிய கௌரவமான ‘Speaker of the Knesset Medal’ஐ பெற்றார்.

பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொண்டிருந்தார். நேற்று அவர் அந்நாட்டு...

வாகன இலக்கத் தகடுகளை பெறாத உரிமையாளர்களுக்கு முக்கிய தகவல்!

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தினால் அச்சிடப்பட்ட சுமார் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான வாகன...

இஸ்ரேல் சென்றடைந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு

இஸ்ரேல் சென்றடைந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு...