அமைச்சர் விஜித ஹேரத் ஜேர்மனிக்கு விஜயம்

Date:

வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித்த ஹேரத் நாளை ஜேர்மனிக்கு விஜயம் செய்யவுள்ளார்.

ஜேர்மன் – ஆசிய பசிபிக் வணிக சங்கம் பிரெமன் அத்தியாயத்தால் வழங்கப்பட்ட அழைப்பின் பேரில் ஜேர்மனுக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளும் அமைச்சர் , வர்த்தகம் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான தொடர் கூட்டங்களில் பங்கேற்பார் என வெளிவிவகார அமைச்சு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஆசிய பசிபிக் வணிக சங்கத்தின் பிரெமன் அத்தியாயத்தின் 125ஆவது ஆண்டு விழா தொடர்பான நிகழ்வுகளில் ஆசியாவிலிருந்து கௌரவ விருந்தினராகவும், முக்கிய பேச்சாளராகவும் அமைச்சர் கலந்துகொள்ளவுள்ளார்.

ஜேர்மனியிலிருந்து கௌரவ விருந்தினராகவும், முக்கிய பேச்சாளராகவும் பங்கேற்கும் ஜேர்மனியின் வெளிவிவகார அமைச்சர் ஜோஹன் வடேபுல்லும் கலந்துகொள்வார் என அமைச்சு தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

அமைதிப்பேச்சு: பாகிஸ்தான் சென்றார் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ்: பாகிஸ்தானில் உற்சாக வரவேற்பு.

ஈரான் உடனான அமைதிப் பேச்சுவார்த்தையை மேற்கொள்ள பாகிஸ்தான் வந்த அமெரிக்க துணை...

வாகனங்களுக்கான எரிபொருள் QR முறைமை நீக்கம்?

புத்தாண்டு காலத்தை முன்னிட்டு, இன்று (11) முதல் எதிர்வரும் 18ஆம் திகதி...

ஆசிரிய சேவையிலிருந்து ஓய்வு பெறும் ஆரம்பப்பிரிவு ஆசிரிய ஆலோசகர் மௌபியா அவர்களுக்கு கஹட்டோவிட்டவில் கௌரவிப்பு!

கம்பஹா மற்றும் மினுவாங்கொட கல்வி வலயங்களில் நீண்டகாலமாக ஆரம்பப்பிரிவு ஆசிரிய ஆலோசகராகப்...

தமிழ்- சிங்கள புத்தாண்டை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு!

நாட்டின் பொதுமக்களின் மிக முக்கியமான பாரம்பரிய விழாவான சித்திரை புத்தாண்டு காலத்தில்...