2026 ஆம் ஆண்டிற்காகத் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்கள், பிரிவெனாக்களில் கல்வி பயிலும் இல்லற மற்றும் துறவற மாணவர்கள் மற்றும் சீலமாதாக்களுக்கு 3,000.00 ரூபாய் பெறுமதியான காலணி வவுச்சர்களை வழங்கும் திட்டத்தின் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய குறித்த வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலம் 2026.02.28 ஆம் திகதியுடன் நிறைவடையவிருந்தது.
தற்போது அதன் செல்லுபடியாகும் காலம் 2026.03.15 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
பயப்பயனாளிகள் அனைவரும் மார்ச் 15 ஆம் திகதிக்கு முன்னர் தமது வவுச்சர்களைப் பயன்படுத்தி காலணிகளைப் பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
