முஸ்லிம்களின் மூன்றாவது புனிதஸ்தலமான அல்-அக்ஸா பள்ளிவாசலில் இடம்பெற்ற முதல் தராவிஹ் தொழுகை.

Date:

முஸ்லிம்களின் மூன்றாவது புனிதத் தலமாகக் கருதப்படும் பலஸ்தீனத்தின் அல்-அக்ஸா பள்ளிவாசலில், ரமழான் மாதத்தின் முதல் தராவிஹ் தொழுகை நேற்று இரவு மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக நடைபெற்றது.

2026 ஆம் ஆண்டு ரமழான் மாதத்தின் முதல் பிறை தென்பட்டதைத் தொடர்ந்து,  ஜெருசலேமில் முதல் தராவிஹ் தொழுகை தொடங்கியது.

இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் பழைய நகரம் மற்றும் பள்ளிவாசலின் நுழைவாயில்களில் கடுமையான சோதனைகளை மேற்கொண்டனர். குறிப்பாக, இளைஞர்கள் உள்ளே நுழைய பல இடங்களில் தடை விதிக்கப்பட்டது.

அச்சுறுத்தல்கள் மற்றும் கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும், ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் மசூதி வளாகத்திலும் அதன் திறந்தவெளி முற்றங்களிலும் திரண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து சுமார் 250-க்கும் மேற்பட்ட பலஸ்தீனியர்களுக்கு அல்-அக்ஸா பள்ளிவாலுசலுக்குள் நுழைய இஸ்ரேலிய அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.

Popular

More like this
Related

பாடசாலைகளில் முன்னெடுக்கப்படும் விழாக்களை எளிமையான நடத்துங்கள்: கல்வி அமைச்சு

பாடசாலைகளில் முன்னெடுக்கப்படும் பல்வேறு விழாக்கள் மற்றும் கொண்டாட்டங்களுக்கு முன்னைய அறிவுறுத்தல்களைப் புறக்கணித்து...

கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் பாகிஸ்தான் இஸ்லாமிய பல்கலைக்கழகம் இடையே புதிய கல்விசார் ஒத்துழைப்பு

சர்வதேச ரீதியிலான கல்வித் தொடர்புகளை விரிவுபடுத்தும் நோக்கில், கொழும்பு பல்கலைக்கழகம்...

விடுமுறை காலச் சுற்றுலாக்களின் போது முஸ்லிம் சமூகம் பேண வேண்டிய ஒழுக்கக்கோவைகள்: உலமா சபை விசேட வழிகாட்டல்கள்

விடுமுறை காலங் களில் மேற்கொள்ளப் படும் சுற்றுலாக்கள் மற்றும் பயணங்களின் போது...

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து இலங்கைக்கு 700 மில்லியன் டொலர்கள் நிதியுதவி!

நான்காண்டு கால நீட்டிக்கப்பட்ட நிதி வசதி (EFF) ஏற்பாட்டின் கீழ், ஐந்தாவது...