49 கைதிகளுக்கு விசேட ஜனாதிபதி பொது மன்னிப்பு

Date:

நாட்டின் 78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு, சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்கு விசேட ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 34 ஆவது உறுப்புரைக்கு அமைய ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு இணங்க இந்த பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் (ஊடகப் பேச்சாளர்) திரு. ஏ.சி. கஜநாயக்க தெரிவித்துள்ளார்.

இதன்படி, நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளிலிருந்து 49 கைதிகள் நாளை (2026.02.04) விடுதலையாக உள்ளனர்.

அதற்கமைய, சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வரும் கைதிகளுக்கு, அவர்கள் பூர்த்தி செய்த ஒவ்வொரு வருடத்திற்கும் ஒரு வாரம் என்ற அடிப்படையில் மன்னிப்பு வழங்கப்படுள்ளது.

அத்துடன், 75,000 ரூபாவுக்கும் குறைந்த அபராதத் தொகையை செலுத்தத் தவறியமைக்காக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் கைதிகளின் எஞ்சிய தண்டனை காலமும் இரத்து செய்யப்படவுள்ளது.

Popular

More like this
Related

40 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளுக்கு இன்று முதல் இலவச விசா !

குறுகிய காலத்திற்கு இலங்கைக்கு வருகை தரும் 40 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா...

கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் தடுப்பு: நாடு முழுவதும் 18 புதிய கோல்போஸ்கோபி இயந்திரங்கள் வழங்கிவைப்பு!

இலங்கையில் ஐந்தாவது பொதுவான புற்றுநோயான கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைக் கண்டறிவதற்கும், அது...

விமல் வீரவன்ச கைது

இராணுவ வீரர் நினைவு தின நிகழ்விற்கான ஒத்திகை செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவித்த...