AI Impact 2026: ஜனாதிபதி அனுரகுமார பல்வேறு நாட்டு தலைவர்களுடன் சந்திப்பு!

Date:

2026 செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாட்டுக்காக (AI Impact 2026) புது டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க நேற்றைய தினம் (19) பல்வேறு நாட்டு தலைவர்களை சந்தித்துக் கலந்துரையாடினார்.

AI Impact 2026 மாநாட்டின் பின்னர ஜனாதிபதி அனுரகுமார, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பிரான்ஸ் ஜனாதிபதி எமானுவேல் மக்ரோன் (Emmanuel Macron), செர்பிய ஜனாதிபதி அலெக்சாண்டர் வுசிக் (Aleksandar Vučić) மற்றும் ஸ்லோவாக்கிய குடியரசின் ஜனாதிபதி பீட்டர் பெல்லெக்ரினி (Peter Pellegrini) ஆகியோரை சந்தித்துக் கலந்துரையாடினார்.

இவர்கள் தவிர அபுதாபியின் முடிக்குரிய இளவரசர் ஷேக் காலித் பின் மொஹமட் பின் சயீத் அல் நஹ்யான் (Sheikh Khaled bin Mohamed bin Zayed Al Nahyan), பிரேசில் ஜனாதிபதி லுலா த சில்வா (Lula da Silva), பூட்டான் பிரதமர் Tshering Tobgay ஆகியோரையும் சந்தித்து இருதரப்புப் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தார்.

அதேநேரம், நேற்றைய உச்சி மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி, மனிதகுலத்தின் கலாசார விழுமியங்களையும் திறன்களையும் மேம்படுத்துவதற்கு செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று சுட்டிக்காட்டியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...