AI Impact Summit 2026-ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இந்தியா பயணம்

Date:

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விசேட அழைப்பின் பேரில், ‘AI Impact Summit 2026’ மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இன்று (17) பிற்பகல் இந்தியா புறப்படவுள்ளார்.

மனிதகுலத்தின் நன்மைக்காக செயற்கை நுண்ணறிவை (AI) பொறுப்புடன் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்தியப் பிரதமர் தலைமையில் இம்மாநாடு நடைபெறுகிறது.

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க வரும் 19ஆம் திகதி இம்மாநாட்டில் உரையாற்றவுள்ளார்.

5 நாட்கள் நடைபெறும் இம்மாநாட்டில் 20 நாடுகளின் தலைவர்களும், 45க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகளும் கலந்துகொள்கின்றனர்.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் எதிர்காலப் பாதை மற்றும் உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள அதனை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து விரிவாக ஆலோசிக்கப்படும்.

இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பல நாட்டுத் தலைவர்களுடன் இருதரப்பு உறவுகள் குறித்து முக்கிய பேச்சுவார்த்தைகளை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Popular

More like this
Related

அமைதிப்பேச்சு: பாகிஸ்தான் சென்றார் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ்: பாகிஸ்தானில் உற்சாக வரவேற்பு.

ஈரான் உடனான அமைதிப் பேச்சுவார்த்தையை மேற்கொள்ள பாகிஸ்தான் வந்த அமெரிக்க துணை...

வாகனங்களுக்கான எரிபொருள் QR முறைமை நீக்கம்?

புத்தாண்டு காலத்தை முன்னிட்டு, இன்று (11) முதல் எதிர்வரும் 18ஆம் திகதி...

ஆசிரிய சேவையிலிருந்து ஓய்வு பெறும் ஆரம்பப்பிரிவு ஆசிரிய ஆலோசகர் மௌபியா அவர்களுக்கு கஹட்டோவிட்டவில் கௌரவிப்பு!

கம்பஹா மற்றும் மினுவாங்கொட கல்வி வலயங்களில் நீண்டகாலமாக ஆரம்பப்பிரிவு ஆசிரிய ஆலோசகராகப்...

தமிழ்- சிங்கள புத்தாண்டை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு!

நாட்டின் பொதுமக்களின் மிக முக்கியமான பாரம்பரிய விழாவான சித்திரை புத்தாண்டு காலத்தில்...