NewsNow தலைமை ஆசிரியர் ஃபியாஸ் முஹம்மது பிரியாவிடை: பஹன மீடியா நிறுவனத்தில் பாராட்டு விழா!

Date:

NewsNow செய்தித் தளத்தின் தலைமை ஆசிரியராகவும், பஹன மீடியா (Pahana Media) நிறுவனத்தின் வளர்ச்சிக்கு முக்கிய தூணாகவும் விளங்கிய மூத்த ஊடகவியலாளர் ஃபியாஸ் முஹம்மது அவர்கள், 5 ஆண்டுகால சேவையின் பின் அந்நிறுவனத்திலிருந்து விடைபெற்றுள்ளார். அவரை கௌரவிக்கும் வகையில் நிறுவன அலுவலகத்தில் சிறப்பு விடைபெறுதல் நிகழ்வு அண்மையில் நடைபெற்றது.

பஹன மீடியா நிறுவனத்தின் தலைவர் செய்யித் சாலிம் ரிஃபாய் மௌலானா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், NewsNow பிராண்டை மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்த ஃபியாஸ் அவர்களின் கடின உழைப்பு மற்றும் சமூகப் பணிகள் வெகுவாகப் பாராட்டப்பட்டன.

இந்நிகழ்வில் உரையாற்றிய தலைவர் செய்யித் சாலிம் ரிஃபாய் மௌலானா மற்றும் பணிப்பாளர் அப்துல் முஜீப் சாலிஹ் மௌலவி ஆகியோர், ஃபியாஸ் அவர்கள் பஹன மீடியா மூலம் வழங்கிய உயரிய ஊடக மற்றும் சமூக சேவைகளை நினைவுகூர்ந்தனர். அவரது சேவையைப் பாராட்டி தலைவரால் சிறப்பு நினைவுப் பரிசு ஒன்றும் வழங்கப்பட்டது.

புலனாய்வுச் செய்திகள் மற்றும் அரசியல் கட்டுரைகள் மூலம் தமிழ் வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றவர் ஃபியாஸ் முஹம்மது.

கணக்காளராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கிய இவர், Adametexpo மற்றும் Mercylanka போன்ற நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார்.

புகழ்பெற்ற ‘மீள்பார்வை’ பத்திரிகையின் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி, தமிழ் ஊடகத்துறையில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார்.

கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக NewsNow தலைமை ஆசிரியராக இருந்து, மக்கள் நலன் சார்ந்த செய்திகளுக்கு முன்னுரிமை அளித்துச் செயல்பட்டார்.

நவம்பர் 2025 இல் NewsNow நிறுவனத்திலிருந்து விடைபெற்ற ஃபியாஸ் முஹம்மது, தற்போது ‘சமநீதி’ (Samaneethi) எனும் சஞ்சிகையைத் தொடங்கி தனது ஊடகப் பணியை இன்னும் வீரியத்துடன் முன்னெடுத்து வருகிறார். அவரது புதிய முயற்சிகளும், சமூகப் பணிகளும் சிறக்க NewsNow குழுமம் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

Popular

More like this
Related

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையும் அதிகரிப்பு

லாஃப்ஸ் கேஸ் நிறுவனம் நேற்று (11) நள்ளிரவு முதல் அமலுக்கு வரும்...

இன்று கிடைக்கப்பெறும் அஸ்வெசும கொடுப்பனவு

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதலாம் கட்டப் பயனாளிகளுக்கான மார்ச் மாதக் கொடுப்பனவு...

நாட்டின் சில பகுதிகளில் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில்

இன்றையதினம் (12) நாட்டின் ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு, அம்பாறை, அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும்...

2026ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 18,000 எலிக்காய்ச்சல் சம்பவங்கள் பதிவு

நாட்டில் கடந்த ஒரு வருட காலப்பகுதியில் மாத்திரம் சுமார் 13,000 எலிக்காய்ச்சல்...