சர்வதேச தாய்மொழி தினம் இன்றாகும்

Date:

ஒவ்வொரு வருடமும் பெப்ரவரி 21ம் திகதி தாய்மொழி தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. மொழிசார்ந்த மற்றும் பல்வேறு கலாசார பண்பாடுகளை பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை இந்த நாள் வலியுறுத்துகிறது.

1999ம் ஆண்டு யுனெஸ்கோ மாநாட்டின் போது சர்வதேச தாய்மொழி தினம் அங்கீகரிக்கப்பட்டது. 2000மாம் ஆண்டுக்கு பின்னர் அது உலகளவில் அனுஷ்டிக்கப்பட ஆரம்பித்தது.

நிலையான சமூக கட்டியெழுப்பலுக்கு கலாசார மற்றும் பல் மொழி கலாசாரம் அத்தியாவசியமானதென யுனெஸ்கோ சுட்டிக்காட்டியுள்ளது. இவ்வாறானதொரு தினத்தை கொண்டாடுவதற்கான முதல் யோசனையை பங்களாதேஸ் முன்வைத்திருந்தது.

குறித்த நாடு தாய்மொழியை பாதுகாப்பதற்காக முகம்கொடுத்த வரலாற்று அனுபவங்கள் மற்றும் மொழி சார்ந்த பல்வேறு விடயங்கள் உட்பட பல் கலாசாரத்திற்கென அந்நாட்டு வெளிப்படுத்திய அர்ப்பணிப்பு இந்த அங்கீகாரத்திற்கு அடிப்படையாக அமைந்தது.

1952ம் ஆண்டு அந்நாட்டு அரசு உர்து மொழியை தேசிய மொழியாக அறிவிக்க எடுக்க தீர்மானத்திற்கு அந்நாட்டில் பாரிய எதிர்ப்பு அலைகள் ஏற்ப்பட்டன. இந்த போராட்டத்தில் பல மாணவர்கள் உயிர் தியாகம் செய்தனர். பின்னர் பெங்காலி மொழி தேசிய மொழியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இதற்கமைய மொழி உரிமைக்காக மேற்கொள்ளப்பட்ட குறித்த அர்ப்பணிப்பை நினைவுகூறும் வகையில் 1999ம் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பினால் ஒவ்வொரு வருடமும் பெப்ரவரி 21ம் திகதி சர்வதேச தாய்மொழி தினமாக பெயரிடப்பட்டது.

Popular

More like this
Related

ஃபியூச்சர் பார்ட்டி’ கலைப்பு: கட்சி அரசியலிலிருந்து விலகுவதாக துருக்கியின் முன்னாள் பிரதமர் அறிவிப்பு!

துருக்கியின் முன்னாள் பிரதமரும் 'ஃபியூச்சர் பார்ட்டி' (Future Party) தலைவருமான அகமத்...

எல் நினோ தீவிரமடைகிறது; இலங்கை தயார் நிலையில் இருக்க வேண்டும் என எச்சரிக்கை!

எல் நினோ’ (El Niño) காலநிலை நிகழ்வால் ஏற்படக்கூடிய கடுமையான விளைவுகளை...

தேசிய நூலக சேவையின் தலைவர் இராஜினாமா!

மூத்த பாடலாசிரியர் ரத்ன ஸ்ரீ விஜேசிங்க, தேசிய நூலக மற்றும் ஆவணவாக்கல்...

84 ஆயிரத்தை கடந்த டெங்கு பாதிப்பு எண்ணிக்கை; 61 பேர் உயிரிழப்பு!

ஜூலை 29 நள்ளிரவு நிலவரப்படி, இலங்கையில் இந்த ஆண்டு டெங்கு நோயால்...