சவூதி, பஹ்ரைன், கத்தார், UAE மீதும் ஈரான் தாக்குதல்.. அமெரிக்காவால் வெடிக்கும் 3ம் உலகப்போர்?

Date:

ஈரான் மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் சேர்ந்து ஆக்ரோஷமாக தாக்கி வருகின்றன. இதையடுத்து ஈரான் பதிலடி தாக்குதலை தொடங்கி உள்ளது.

ஈரான் தற்போது இஸ்ரேல், பஹ்ரைன், கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவூதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் மீது தாக்குதலை தொடங்கி உள்ளது.

மொத்தமாக இன்று ஒரே நாளில் 7 நாடுகள் இடையே பிரச்சனை வெடித்துள்ளது. இதனால் 3ம் உலகப்போர் வெடிக்கும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

ஈரான் அணுஆயுதம் தயாரிப்பதாக இஸ்ரேல், அமெரிக்கா தொடர்ந்து குற்றம்சாட்டின. இதனை கண்டித்து கடந்த ஆண்டு இஸ்ரேலும், அமெரிக்காவும் ஈரான் மீது குண்டுவீசி தாக்குதல் நடத்தியது.

இதையடுத்து இன்று மீண்டும் ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அணுஆயுதம் தயாரிக்க மாட்டோம் என்று ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்று டிரம்ப் ஈரானிடம் கூறினார். ஆனால் ஈரான் கேட்கவில்லை. இதனால் ஈரானை சுற்றி போர்க்கப்பல், போர் விமானங்களை நிலைநிறுத்தி மிரட்டி வந்தார்.

இதற்கிடையே தான் இன்று அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடான இஸ்ரேல், ஈரானை தாக்கியது. ஈரான் மீது ஏவுகணைகள் மூலம் இஸ்ரேல் தாக்கியது. இதில் அமெரிக்க இணைந்தது. இதனால் 3 நாடுகளும் இணைந்தன.

இஸ்ரேலும், அமெரிக்காவும் சேர்ந்து ஈரானில் 30 இடங்களை டார்க்கெட் செய்து தாக்குதல் நடத்தியது. போர் விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்களில் இருந்தும் ஏவுகணைகளை அமெரிக்கா அனுப்பியது.

இதற்கு ஈரான் பதிலடி கொடுத்தது. தங்கள் மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேல் மீது டெல்அவிவ், ஜெருசலேம் நகரை நோக்கி ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலை நடத்தி வருகிறது. அதுமட்டுமின்றி அமெரிக்காவுக்கு பாடம் புகட்டும் வகையில் அந்த நாட்டின் ராணுவ தளம், விமானப்படை தளம் உள்ள இடங்களை குறிவைத்து ஈரான் தாக்கி வருகிறது.

அமெரிக்காவை எடுத்து கொண்டால் மத்திய கிழக்கில் பல நாடுகளில் விமான தளம், ராணுவ தளம், கடற்படை தளத்தை வைத்துள்ளது. பஹ்ரைன், கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத், சவூதி அரேபியா, ஈராக், ஜோர்டான் உள்ளிட்ட நாடுகளில் ராணுவ முகாம், கடற்படைமுகாம், விமான தளங்களை வைத்துள்ளது.

இந்த தளங்களை வைத்து தான் அமெரிக்கா, ஈரான் உள்பட மத்திய கிழக்கில் அமெரிக்காவுக்கு அடிபணியாத நாடுகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் தான் ஈரான் பதிலடி கொடுத்துள்ளது. பஹ்ரைன், கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அதன்படி பஹ்ரைன் நாட்டில் உள்ள அமெரிக்காவின் கடற்படை தளம் உள்ளது. வளைகுடா, செங்கடல், அரபிக்கடல் மற்றும் இந்திய பெருங்கடல் உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கி இந்த கடற்படை தளம் கண்காணிப்பு பணியை மேற்கொள்ள அமெரிக்காவுக்கு உதவி வருகிறது. அமெரிக்காவின் போர்க்கப்பல்கள், கடற்படை வீரர்கள் இங்கு உள்ளனர். இங்கு தான் தற்போது ஈரான் தாக்குதல் நடத்தி உள்ளது.

சவூதி அரேபியா

சவூதி அரேபியாவில் அமெரிக்காவின் ராணுவ தளம், விமான தளம் உள்ளது. இந்த இடத்தையும் ஈரான் குறிவைத்து தாக்கி உள்ளது. ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திய சில மணிநேரங்களில் சவூதி அரேபியா தலைநகர் ரியாத்தில் ஈரான் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ்

அதேபோல் ஐக்கிய அரபு எமிரேட்ஸிலும் அமெரிக்காவுக்கு சொந்தமான அல் தாப்ரா விமான தளம் அமைந்துள்ளது. இந்த விமான தளத்தை நோக்கியும் ஈரான் தாக்குதலை தொடங்கி உள்ளது. முதற்கட்டமாக அபுதாபியில் சில இடங்களில் தாக்குதல் நிகழ்ந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் அமெரிக்கா அதிர்ச்சியடைந்துள்ளது. இதனால்

கத்தார்

அதேபோல் கத்தாரில் உள்ள அமெரிக்காவின் விமானப்படை தளத்தையும் ஈரான் குறிவைத்துள்ளது. கத்தார் தலைநகர் தோஹாவிற்கு வெளியே பாலைவனப்பகுதியில் அமெரிக்காவுக்கு சொந்தமான அல் உதித் விமானப்படை தளம் உள்ளது. மொத்தம் 24 ஏக்கரில் இந்த விமான தளம் அமைந்துள்ளது. இது மத்திய கிழக்கில் கட்டளை மையத்தின் தலைமையகமாக உள்ளது.

இந்த விமானப்படை தளத்தை நோக்கி ஈரான் ஏவுகணைகளை அனுப்பியது. இருப்பினும் அங்குள்ள வான்வெளி பாதுகாப்பு அமைப்பு ஈரானின் ஏவுகணையை இடைமறித்து அழித்துள்ளது. இதனை கத்தார் பாதுகாப்பு அமைச்சகம் உறுதி செய்துள்ளது.

இப்படி ஈரான் சுற்றி சுற்றி அமெரிக்காவின் விமான தளம், ராணுவதளம், கடற்படை தளத்தை குறிவைத்து தாக்குவதால் மத்திய கிழக்கு நாடுகளில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. தற்போது வரை ஈரான், இஸ்ரேல், பஹ்ரைன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார், சவூதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலை ஈரான், இஸ்ரேல், அமெரிக்கா, ஏமனின் ஹவுதிகள் முன்னின்று நடத்துகின்றன. இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா ஈரானை தாக்கும் அதேவேளையில் ஈரானுக்கு ஆதரவாக ஹவுதிகள் தாக்குதலை நடத்துகின்றன. இதனால் 3ம் உலகப்போர் வெடிக்கிறதா ? என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

சவூதி வாழ் இலங்கையர்களுக்கு இலங்கை தூதரகம் அவசர எச்சரிக்கை!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது நிலவி வரும் அசாதாரண பாதுகாப்பு சூழ்நிலையை...

இலங்கையர்களுக்கு பாதிப்பில்லை : வெளிவிவகார அமைச்சு தகவல்!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள அனைத்து இலங்கை இராஜதந்திர தூதரகங்களுடனும் நெருங்கிய...

மத்தியக் கிழக்கில் போர் பதற்றம்: ஸ்ரீலங்கன் விமான சேவையில் தாமதம்

இஸ்ரேல் – ஈரான் போர் பதற்றம் காரணமாக மத்திய கிழக்கு நாடுகள்...

கத்தாரிலுள்ள இலங்கையர்களுக்கான முக்கிய அறிவுறுத்தல்

தற்போதைய பிராந்திய பாதுகாப்பு நிலவரங்களைக் கருத்திற்கொண்டு, கத்தாரில் வசிக்கும் இலங்கை பிரஜைகள்...