சவூதியில் ரமழான் பிறை தென்பட்டது: நாளை முதல் புனித நோன்பு ஆரம்பம்

Date:

சவூதி அரேபியாவில் ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை தென்பட்டுள்ளதாக அந்நாட்டு உச்ச நீதிமன்றம் மற்றும் மத விவகார அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

 பிறை தென்பட்டதை அடுத்து, சவூதி அரேபியாவில் நாளை (18, புதன்கிழமை) முதல் புனித ரமழான் நோன்பு ஆரம்பமாகிறது.

இன்று இரவு இஷா தொழுகையைத் தொடர்ந்து, சவூதி அரேபியாவின் அனைத்துப் பள்ளிகளிலும் ரமழான் மாதத்திற்கான சிறப்பு ‘தராவீஹ்’ தொழுகைகள் நடைபெறும்.

இலங்கையைப் பொறுத்தவரை, ரமழான் பிறை குறித்து நாளை (புதன்கிழமை) இரவு கொழும்பு பெரிய பள்ளிவாசல் மற்றும் பிறைக் குழு கூடி இறுதி முடிவை அறிவிக்கும்.

புனித ரமழான் மாதத்தை வரவேற்கும் விதமாக உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியப் பெருமக்கள் உற்சாகத்துடன் தயாராகி வருகின்றனர்.

Popular

More like this
Related

தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு கோரிக்கை!

நீர்ப்பாசனத் துறை இயக்குநர், நீர் மேலாண்மைப் பொறியாளர் எச்.எம்.பி.எஸ்.டி. ஹெரத், தனது...

HIV மற்றும் பாலியல் சார் நோய்களைக் கண்டறிய விசேட ‘நடமாடும் முகாம்கள்’!

எச்.ஐ.வி, கல்லீரல் அழற்சி (Hepatitis) மற்றும் பாலியல் சார் நோய்களை முன்கூட்டியே...

ஜூலை 13: கோட்டாபய ராஜபக்ஷ இலங்கையை விட்டு வெளியேறி நான்கு ஆண்டுகள் – ஒரு பார்வை

இலங்கையின் மிகவும் சக்திவாய்ந்த நிறைவேற்று ஜனாதிபதிகளில் ஒருவரான  கோட்டாபய ராஜபக்ஷவை 2022,...

முன்பள்ளி செல்லும் சிறுவர்களுக்கு பாதுகாப்பான ஆடைகளை அணிவிக்குமாறு வேண்டுகோள்!

டெங்கு அச்சுறுத்தல் நிலவும் சூழலில், டெங்கு நுளம்புகளிடமிருந்து பாதுகாப்பதற்காக, தங்கள் கைகளையும்...