பெப்ரவரி மாதத்திற்கான ‘அஸ்வெசும’ முதலாம் மற்றும் இரண்டாம் கட்டங்களின் கீழான முதியோர் கொடுப்பனவுகள் இன்று (26) வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, அஸ்வெசும முதலாம் கட்டத்தின் கீழ் முதியோர் கொடுப்பனவுகளுக்காக ரூ. 31 கோடிக்கும் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அதேபோல், அஸ்வெசும இரண்டாம் கட்டத்தின் கீழ் முதியோர் கொடுப்பனவுகளுக்காக ரூ. 3 கோடிக்கும் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் மொத்தம் 8,89,375 பயனாளிகளுக்கு நிதி வழங்கப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை குறிப்பிட்டுள்ளது.
