இலங்கை நெருக்கடி நிலையிலிருந்து மீண்டு, மிகவும் நெகிழ்ச்சியான பொருளாதாரத்தை நோக்கி நகர்ந்து வருவதாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) தலைவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை தற்போது ஒரு சிறந்த திருப்புமுனையில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இலங்கையின் பொருளாதார முன்னேற்றத்திற்காக ஆசிய அபிவிருத்தி வங்கி மேலதிகமாக 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
