இலங்கை கடற்பரப்பில் ஈரானிய போர்க்கப்பலை தாக்கியதற்காக அமெரிக்கா கடும் வருத்தப்படும் – ஈரான் எச்சரிக்கை!

Date:

சர்வதேச கடல் எல்லையில் ஈரானிய போர்க்கப்பலான ஐரிஸ் தேனாவை (IRIS Dena)  அமெரிக்கா தாக்கியதற்கு ஈரானின் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அரக்சி கண்டனம் தெரிவித்தார்.

இது குறித்து எக்ஸில் பதிவிட்டுள்ள அவர், ஈரான் கடற்கரையிலிருந்து 2,000 மைல்கள் தொலைவில் கடலில் அமெரிக்கா ஒரு அட்டூழியத்தைச் செய்துள்ளது.

கிட்டத்தட்ட 130 மாலுமிகளை ஏற்றிச் சென்ற இந்திய கடற்படையின் விருந்தினரான ஃபிரிகேட் தேனா, சர்வதேச நீரில் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் தாக்கப்பட்டது.

அமெரிக்காவின் இந்த தவறான முன்னுதாரணத்திற்கு கடுமையாக வருத்தப்பட வேண்டும் – என்றும் எச்சரித்தார்.

இலங்கையின் தெற்கு கடற்கரையில் இந்தியப் பெருங்கடலில் மூழ்கிய ஈரானிய போர்க்கப்பலான ஐரிஸ் தேனாவை அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் தாக்கிய ஒரு நாளுக்குப் பின்னர் தெஹ்ரானில் இருந்து அதிகாரப்பூர்வ எதிர்வினை வந்துள்ளது.

புதன்கிழமை (4) நடந்த இந்த தாக்குதலில் குறைந்தது 83 பேர் கொல்லப்பட்டனர், அதே நேரத்தில் இலங்கை கடற்படை காயமடைந்த 32 மாலுமிகளை மீட்டது, அவர்கள் தற்போது காலி, கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Popular

More like this
Related

புத்தாண்டு என்பது பண்டிகை மட்டுமல்ல, எமது கலாசார விழுமியங்களில் பொதிந்துள்ள சுபீட்சம், ஒற்றுமை, சகவாழ்வு: பிரதமரின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி!

சூரியன் மீன இராசியிலிருந்து மேஷ இராசிக்குச் சங்கமிப்பதையும், அறுவடைப் பணிகள் நிறைவடைந்து...

கூட்டுச் செயல்பாடுகள் மூலம் வெளிப்படும் சமூக-கலாசார பிணைப்புடன் இந்த புத்தாண்டு அமைய நல்வாழ்த்துகள்: ஜனாதிபதியின் புத்தாண்டு செய்தி

பௌதீக ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் மாற்றம் பெறுவதை அடையாளப்படுத்தும் சிங்கள மற்றும்...

அமைதிப்பேச்சு: பாகிஸ்தான் சென்றார் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ்: பாகிஸ்தானில் உற்சாக வரவேற்பு.

ஈரான் உடனான அமைதிப் பேச்சுவார்த்தையை மேற்கொள்ள பாகிஸ்தான் வந்த அமெரிக்க துணை...

வாகனங்களுக்கான எரிபொருள் QR முறைமை நீக்கம்?

புத்தாண்டு காலத்தை முன்னிட்டு, இன்று (11) முதல் எதிர்வரும் 18ஆம் திகதி...