ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

Date:

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய நாடுகள் சபை பாராட்டியுள்ளது.

இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப் பிரதிநிதி மார்க் ஆண்ட்ரே ஃப்ரெஞ்ச் (Marc-André Franche) தனது “X” தளத்தில் பதிவொன்றை இட்டு இதனைத் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச உடன்படிக்கைகளின் அடிப்படையில் பல்லினத்தன்மை மீதான அர்ப்பணிப்பை மதித்து, நடுநிலைமை மற்றும் அமைதிக்காக இலங்கை அரசாங்கம் காட்டிய மனிதாபிமான தலையீட்டை அவர்கள் பெரிதும் பாராட்டுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் செயற்பட்ட விதம், சர்வதேச ரீதியாக வழங்கப்பட்ட வாக்குறுதிகளைப் பாதுகாப்பதில் இலங்கையின் அர்ப்பணிப்பைச் சிறப்பாகப் பிரதிபலிக்கிறது என்றும் மார்க் ஆண்ட்ரே ஃப்ரெஞ்ச் தனது பதிவில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

புத்தாண்டு என்பது பண்டிகை மட்டுமல்ல, எமது கலாசார விழுமியங்களில் பொதிந்துள்ள சுபீட்சம், ஒற்றுமை, சகவாழ்வு: பிரதமரின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி!

சூரியன் மீன இராசியிலிருந்து மேஷ இராசிக்குச் சங்கமிப்பதையும், அறுவடைப் பணிகள் நிறைவடைந்து...

கூட்டுச் செயல்பாடுகள் மூலம் வெளிப்படும் சமூக-கலாசார பிணைப்புடன் இந்த புத்தாண்டு அமைய நல்வாழ்த்துகள்: ஜனாதிபதியின் புத்தாண்டு செய்தி

பௌதீக ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் மாற்றம் பெறுவதை அடையாளப்படுத்தும் சிங்கள மற்றும்...

அமைதிப்பேச்சு: பாகிஸ்தான் சென்றார் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ்: பாகிஸ்தானில் உற்சாக வரவேற்பு.

ஈரான் உடனான அமைதிப் பேச்சுவார்த்தையை மேற்கொள்ள பாகிஸ்தான் வந்த அமெரிக்க துணை...

வாகனங்களுக்கான எரிபொருள் QR முறைமை நீக்கம்?

புத்தாண்டு காலத்தை முன்னிட்டு, இன்று (11) முதல் எதிர்வரும் 18ஆம் திகதி...