எரிபொருள் QR பதிவுகளில் சிக்கல்களை தீர்க்க WhatsApp உதவி!

Date:

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்திற்காக (National Fuel Pass) பதிவு செய்வதில் சிக்கல்களை எதிர்நோக்கும் வாகன உரிமையாளர்களுக்காக அரசாங்க தகவல் மையம் (GIC) விசேட WhatsApp சேவை ஒன்றினை அறிமுகப்படுத்தியுள்ளது.

உங்களது வாகன இலக்கத்தை (Vehicle Number) டைப் செய்து 076 000 1919 என்ற WhatsApp இலக்கத்திற்கு அனுப்பவும். (வாகன இலக்கத்தை புகைப்படமாக அனுப்ப வேண்டாம்).

அத்துடன் பின்வரும் ஆவணங்களின் தெளிவான புகைப்படங்களை அதே இலக்கத்திற்கு அனுப்பவும்.

தேசிய அடையாள அட்டை (NIC) / ஓட்டுநர் அனுமதிப்பத்திரம் அல்லது கடவுச்சீட்டு.

செல்லுபடியாகும் வருமான வரி அனுமதிப்பத்திரம் (Vehicle License).

வாகனப் பதிவுச் சான்றிதழ் (CR).

வாகனத்தின் பதிவுசெய்யப்பட்ட உரிமையாளர் மாத்திரமே இந்த உதவியைக் கோர முடியும்.

சமர்ப்பிக்கப்படும் அடையாள அட்டை இலக்கமானது, வாகனப் பதிவுச் சான்றிதழில் (CR) உள்ள உரிமையாளரின் இலக்கத்துடன் ஒப்பிடப்படும்.

உங்களது தனிப்பட்ட தரவுகள் 2022 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க தனிநபர் தரவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்படும். தரவுகள் சரிபார்ப்பு (Validation) நோக்கத்திற்காக மாத்திரமே சேகரிக்கப்படுவதுடன், சரிபார்ப்பு முடிந்ததும் வாகன இலக்கம் தவிர ஏனைய அனைத்து தரவுகளும் பாதுகாப்பாக நீக்கப்படும்.

Popular

More like this
Related

பெரும்பான்மையை ஏற்றுக் கொண்டார் ஆளுநர்: த.வெ.க. தலைவர் விஜய் நாளை தமிழக முதல்வராக பதவியேற்கிறார்.

தமிழக வெற்றிக் கழகத்திற்கு காங்கிரஸ், இரண்டு இடது சாரிகள், விசிக, ஐ.யு.எம்.எல்....

ஐயூஎம்எல் ஆதரவு: தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!

தவெக ஆட்சியமைக்க இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி நிபந்தனையற்ற ஆதரவு...

அதிகரிக்கும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 9 லட்சத்திற்கும் அதிக சுற்றுலாப் பயணிகள்...

வியட்நாம் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் நிறைவு

இலங்கைக்கான அரச விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த வியட்நாம் சோசலிசக் குடியரசின்...