சிஐடிக்குள் இஷாரா செவ்வந்தியின்பிறந்தநாள் கொண்டாட்டம் ; பொலிஸ் அதிகாரிகளுக்கு அதிரடி

Date:

பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த கனேமுல்ல சஞ்சீவவின் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்திக்கு, பொலிஸ் பிரிவுக்குள் பிறந்தநாள் கொண்டாட்டத்தை நடத்திய குற்றச்சாட்டில் சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு எதிராக பொலிஸார் கடும் ஒழுக்காற்று நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு. வூட்லர், மேல் மாகாணத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் தனிப்பட்ட ரீதியில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு விஜயம் செய்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

அங்கு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளைக் கொண்ட குழுவொன்றின் ஊடாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பதிகாரிக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் அதிகாரிகள் அரச அதிகாரிகளாவர் என்றும், அவர்கள் குற்றவாளிகளுடன் எவ்வித தொடர்புகளையும் பேண முடியாது என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு. வூட்லர் இதன்போது வலியுறுத்தினார்.

பொலிஸ் அதிகாரிகள் தமது கடமைகளைச் செய்யும்போது தமது பொறுப்புகளை பேண வேண்டும் என்றும் அவர் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.

Popular

More like this
Related

அல்குர்ஆன் வசனங்களின் எழில்மிகு வடிவங்கள்:தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் அல்-குர்ஆனிய அறிவியல் அரபு எழுத்தணி போட்டி மற்றும் கண்காட்சி!

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அரபு மொழிப் பீடத்தின்...

காசாவில் இஸ்ரேலின் தீவிர வான் தாக்குதல்: ஹமாஸ் ஆயுதப்பிரிவு தளபதி இஸ் அல்-தின் அல்-ஹத்தாத் குறிவைப்பு!

மேற்கு காசா நகரிலுள்ள ரிமால் பகுதியில் இஸ்ரேல் நடத்திய அடுத்தடுத்த வான்வழித்...

78 ஆண்டுகால நக்பா பேரவலம்: பூர்வீக நிலத்திற்காக ஏங்கும் பாலஸ்தீனர்கள்!

மே 15, பாலஸ்தீன வரலாற்றில் என்றும் மறக்க முடியாத ஒரு கருப்பு...

இறக்குமதி வாகனங்களுக்கான இறக்குமதி சுங்க வரியில் மாற்றம்

இறக்குமதி வாகனங்களுக்கான இறக்குமதி சுங்க வரி மறுசீரமைக்கப்பட்டுள்ளது. இறக்குமதி தீர்வை வரி...