பொதுவாக அறிவுலகத்திற்கும், உலக முஸ்லிம் சமூகத்திற்கும் பெரும் அறிவுப் பங்களிப்பை வழங்கிய மலேசியாவின் சிறந்த இஸ்லாமிய சிந்தனையாளர் அறிவுலக ஜாம்பவான் பேராசிரியர் நகீப் அத்தாஸ் அவர்கள் அல்லாஹ்வின் அழைப்பை ஏற்று சென்றுவிட்டார்.
1931 செப்டம்பர் 5 ஆம் தேதி ஜாவா தீவிலுள்ள போகோர் நகரில் பிறந்த அவர், தனது ஆரம்பக் கல்விக் காலத்திலேயே மலாய் இலக்கியம், வரலாறு, மதம் மற்றும் பாரம்பரிய ஆய்வுகளில் ஆழ்ந்த ஆர்வம் காட்டினார்.
பின்னர் University of Malayaயில் தனது பட்டப்படிப்பை முடித்தார். தொடர்ந்து McGill University Institute of Islamic Studiesயில் இஸ்லாமிய தத்துவத்தில் முதுநிலைப் பட்டம் பெற்றதுடன், அதே ஆண்டில் SOAS University of Londonயில் தனது கலாநிதி ஆய்வையும் நிறைவு செய்தார்.
அரை நூற்றாண்டுக்கும் மேலாக அவர் இஸ்லாமிய சிந்தனை மற்றும் நாகரிக புனர்நிர்மாணப் பணியில் ஈடுபட்டு மகத்தான பங்களிப்பை செய்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
மனிதன் வெறும் உடல் அல்ல; ரூஹ், கல்ப், அக்ல் போன்ற ஆன்மீக திறன்களைக் கொண்டவர் என்றும், உண்மையான முன்னேற்றம் பொருளாதார வளர்ச்சியில் அல்ல, மனிதன் தனது கீழ்மையான ஆசைகளை கட்டுப்படுத்துவதில் இருக்கிறது என்றும் அதுவே மனிதனை அல்-இன்சான் அல்-காமில் (முழுமையான மனிதன்) என்ற உயர்ந்த நிலைக்கு இட்டுச் செல்கிறது என்றும் அவர் வலியுறுத்தினார்.
1987 ஆம் ஆண்டு கோலாலம்பூரில் International Institute of Islamic Thought and Civilisation (ISTAC) நிறுவியதன் மூலம் இஸ்லாமிய அறிவு மரபை வளர்த்தார். மலாய் இலக்கியம், தத்துவம், நாகரிகம் உள்ளிட்ட துறைகளில் 28 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதிய அவர், Arabic Calligraphy துறையிலும் சிறந்து விளங்கினார். அவர் எழுதிய இந்த அரபு வழித்தணிகள் அவரது நூல்களது அட்டைகளை அலங்கரிப்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
அவரது அறிவுப் பாரம்பரியம் பல தலைமுறைகளை தொடர்ந்து வழிநடத்தும் என்று நம்ப முடியும். அல்லாஹ் அவர்களுக்கு ஜன்னத்துல் பிர்தெளஸில் உயர்ந்த நிலைகளை அருள்வானாக. ஆமீன்.
Prolegomena to the Metaphysics of Islam: Explores the fundamental structure of the Islamic worldview.
Islam: The Concept of Religion and the Foundation of Ethics and Morality: Discusses the core tenets of Islamic faith and ethics.
Some Aspects of Sufism as Understood and Practised Among the Malays: Examines the historical, mystical traditions in the Malay world.
Islam: The Covenants Fulfilled: Explores the theme of the covenant in Islam
Islam and Secularism – மதச்சார்பின்மையின் சவால்கள் இஸ்லாமிய சிந்தனையை எவ்வாறு பாதிக்கின்றன என்பதைக் ஆய்வு செய்கிறது.
The Concept of Education in Islam – இஸ்லாமிய கல்வித் தத்துவத்திற்கான அடிப்படை வடிவமைப்பை விளக்குகிறது.
Prolegomena to the Metaphysics of Islam – இஸ்லாமிய உலகக் கண்ணோட்டத்தின் அடிப்படை தத்துவ அமைப்பை ஆராய்கிறது.
On Justice and the Nature of Man – மனித இயல்பு மற்றும் நீதி குறித்து ஸூரா அந்நிஸா (4:58) வசனத்தை அடிப்படையாகக் கொண்ட விளக்கம்.
Islam: The Concept of Religion and the Foundation of Ethics and Morality – இஸ்லாமிய நம்பிக்கை, நெறிமுறை மற்றும் ஒழுக்கத்தின் அடிப்படை கோட்பாடுகளை விவரிக்கிறது.
The Intuition of Existence – இஸ்லாமிய மேற்தத்துவம் (Metaphysics) பற்றிய ஆழமான சிந்தனைகளை முன்வைக்கிறது.
Some Aspects of Sufism as Understood and Practised Among the Malays – மலாய் சமூகத்தில் புரிந்துகொள்ளப்பட்டும் நடைமுறையில் இருந்தும் வந்த சூஃபி மரபுகளின் வரலாற்றுப் பார்வை.
The Mysticism of Hamzah Fansuri – 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சூஃபி கவிஞர் ஹம்ஸா ஃபன்ஸூரியின் ஆன்மீக சிந்தனைகளை ஆய்வு செய்கிறது.
