நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் மாத்தறையில் செய்யப்பட்டுள்ளன.
“வளமான நாட்டின் பெருமை அவள் – தேசத்தின் முன்னோடி” எனும் கருப்பொருளின் கீழ், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் ருஹுணு பல்கலைக்கழகத்தில் இது நடைபெறவுள்ளது.
இலங்கை மகளிர் பணியகத்துடன் இணைந்த மகளிர் அமைப்புகளின் சுமார் 1500 உறுப்பினர்களின் பங்கேற்புடன் இது நடைபெறவுள்ளது.
இதேவேளை, சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டம் நாளை (8) கொழும்பு பி.டி. சிறிசேன விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் ஆகியோரின் பங்கேற்புடன் இது நடைபெறவுள்ளது. தேசிய மக்கள் சக்தியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த விழா நாளை (8) முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
