ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர் இலங்கை வருகை!

Date:

இலங்கை அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அழைப்பை ஏற்று, ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர் ரோமன் மார்ஷவின் (Roman Marshavin) இன்று (26) உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வருகிறார்.

ரஷ்யாவின் எரிசக்தித் துறை பிரதி அமைச்சருக்கும், இலங்கையின் நிதித்துறை பிரதியமைச்சர் கலாநிதி அனில் ஜெயந்த பெர்னாண்டோவுக்கும் இடையே இன்று கலந்துரையாடல் நடைபெற உள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதைத் தொடர்ந்து, ரஷ்ய பிரதி அமைச்சர் இன்று ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவை சந்திக்க உள்ளார்.

இலங்கை தனது எரிசக்தி நெருக்கடியைக் கடந்து செல்ல உதவும் வகையில், இந்தச் சந்திப்புகளின் போது பல கலந்துரையாடல்களும் உடன்படிக்கைகளும் திட்டமிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

தொடர்புடைய கலந்துரையாடல்களுக்குப் பின்னர், அவர் நாளை வெளிவிவகார அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சருடன் இரவு விருந்தில் கலந்துகொள்வார்.

எரிசக்தி பிரதி அமைச்சர் 28 ஆம் திகதி ரஷ்யாவுக்குப் புறப்பட உள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

600 அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைக்க நடவடிக்கை!

எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு 600 பொருட்களின் விலைகளைக் குறைத்து, அவற்றை...

IMF பிரதிநிதிகள் இன்று இலங்கை வருகை!

இலங்கையின் பொருளாதார மறுசீரமைப்பு தொடர்பான மிக முக்கியமான பேச்சுவார்த்தைகளுக்காக சர்வதேச நாணய...

சித்திரவதைக்குள்ளாகும் பலஸ்தீன மருத்துவர் அபு சபியா: இஸ்ரேலுக்கு ஐநா நிபுணர்கள் விடுத்துள்ள அவசர கோரிக்கை.

தடுத்து வைக்கப்பட்டுள்ள பலஸ்தீன மருத்துவர் டாக்டர் ஹுஸாம் அபு சஃபியா (Dr. Hussam...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வரண்ட வானிலை நிலவும்

இன்றையதினம் (26) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும்...