வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகளால் இழந்த பணத்தை மீட்கும் விசேட வேலைத்திட்டம்!

Date:

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 1,945 இலட்சம் ரூபாவிற்கும் அதிக நிதியை மீண்டும் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

குறித்த மோசடிகளில் ஈடுபட்ட நபர்கள் மற்றும் அனுமதிப்பத்திரமற்ற வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டு இந்த நிதி வசூலிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 5 மாதங்களில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடியாளர்களுக்கு எதிராக 244 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், அக்காலப்பகுதியில் பணியகத்திற்கு 2,081 பல்வேறு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

இக்காலப்பகுதியில் பணியகத்தின் விசேட விசாரணைப் பிரிவினரால் 19 சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், 88 மோசடியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. அவர்களில் அனுமதிப்பத்திரம் பெற்ற வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களைச் சேர்ந்த மூவரும் அடங்குகின்றனர்.

 

இதேவேளை, இஸ்ரேல், தென்கொரியா, ஜப்பான், ருமேனியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி சமூக ஊடகங்கள் ஊடாக பண மோசடி செய்யும் போக்கு அதிகரித்துள்ளது.
எனவே, பணியகத்திடம் வினவல்களை மேற்கொள்ளாமல் இவ்வாறான மோசடியாளர்களுக்குப் பணம் செலுத்துவதையோ அல்லது தனிப்பட்ட ஆவணங்களை வழங்குவதையோ தவிர்க்குமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

 

Popular

More like this
Related

‘உலகிலேயே மிகச்சிறந்த சுற்றுலாத்தலம் இலங்கை தான்’: வசீம் அக்ரம் புகழாரம்!

உலகிலேயே மிகச்சிறந்த சுற்றுலாத்தலமாக தரப்படுத்தப்படுவதற்கு தகுதியான ஒரு நாடாக இலங்கை விளங்குவதாக...

ஹிஜ்ரி 1448 புத்தாண்டு வழங்கும் செய்தி: இடப்பெயர்வின் வரலாறும் நாட்காட்டியின் முக்கியத்துவமும்!

-Ash-sheikh Hassan Sulaiman (Naleemi) - (fb) காலச்சக்கரத்தின் சுழற்சியில் மற்றுமொரு ஹிஜ்ரி...

கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார கைது

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார,...