புதன்கிழமை விடுமுறை : பொதுப் போக்குவரத்தில் மாற்றம்!

Date:

தற்போது நிலவும் எரிபொருள் விநியோகப் பிரச்சினையை கருத்திற் கொண்டு, அதற்கு முகங்கொடுக்கும் வகையில் இன்று (18) முதல் மறு அறிவித்தல் வரை ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைகளில் அரச ஊழியர்களுக்கு விடுமுறை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இந்த விடுமுறையானது பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் நீதித்துறை ஆகியவற்றுக்கும் பொருந்தும் என அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்.

அதேபோல், அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட பாடசாலைகள் மற்றும் தனியார் மேலதிக வகுப்புக்களுக்கும் இன்றைய தினம் விடுமுறை வழங்குமாறு அரசாங்கம் கோரியுள்ளது.

எவ்வாறாயினும், சுகாதாரம், துறைமுகம், நீர் மற்றும் மின்சாரம் போன்ற அத்தியாவசிய சேவைகளுக்கு இந்த விடுமுறை பொருந்தாது என அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இந்த விசேட விடுமுறை தினம் காரணமாக, இன்றைய தினம் சனிக்கிழமைகளில் இயக்கப்படும் ரயில்கள் மாத்திரமே இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, பிரதான மார்க்கத்தில் 29 ரயில் பயணங்களும், வடக்கு மார்க்கத்தில் 17 பயணங்களும் மற்றும் கடலோர மார்க்கத்தில் 33 பயணங்களும் முன்னெடுக்கப்படவுள்ளன.

அத்துடன், களனிவெளி மார்க்கத்தில் 5 பயணங்களும், புத்தளம் மார்க்கத்தில் 9 பயணங்களும், மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மார்க்கங்களில் 6 பயணங்களும் முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

இதேவேளை, நாடு முழுவதும் வழக்கம்போல பஸ்களை இயக்க நடவடிக்கை எடுப்பதாக இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது. பஸ் இயக்கப்படும் கால அட்டவணையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது.

 

 

Popular

More like this
Related

‘உலகிலேயே மிகச்சிறந்த சுற்றுலாத்தலம் இலங்கை தான்’: வசீம் அக்ரம் புகழாரம்!

உலகிலேயே மிகச்சிறந்த சுற்றுலாத்தலமாக தரப்படுத்தப்படுவதற்கு தகுதியான ஒரு நாடாக இலங்கை விளங்குவதாக...

ஹிஜ்ரி 1448 புத்தாண்டு வழங்கும் செய்தி: இடப்பெயர்வின் வரலாறும் நாட்காட்டியின் முக்கியத்துவமும்!

-Ash-sheikh Hassan Sulaiman (Naleemi) - (fb) காலச்சக்கரத்தின் சுழற்சியில் மற்றுமொரு ஹிஜ்ரி...

கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார கைது

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார,...