இலங்கையின் புதிய இராஜதந்திரிகள் தூதுவர்களின் நியமனங்களுக்கு நாடாளுமன்றம் அனுமதி

Date:

வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களின் பிரதானிகளாக நியமிக்கப்படுவதற்காக, அண்மையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் பெயரிடப்பட்ட தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள் மற்றும் அரச பிரதிநிதிகள் 10 பேரின் நியமனங்களுக்கு உயர் பதவிகள் பற்றிய பாராளுமன்றக் குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நியமிக்கப்பட்டுள்ள இராஜதந்திரிகள் மற்றும் அவர்களின் பதவிகள் குறித்த விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளன:

1. தர்ஷன எம். பெரேரா – மலேசியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர்.
2. டி.எம்.எஸ்.பி. தசநாயக்க – ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் தூதுவர் மற்றும் நிரந்தரப் பிரதிநிதி (ஏற்கனவே பதவியேற்றுள்ளார்).
3. தயானி மென்டிஸ் – ஓஸ்திரியாவுக்கான இலங்கையின் தூதுவர் மற்றும் நிரந்தரப் பிரதிநிதி.
4. எஸ்.பி.டபிள்யூ. பத்திரண – ரூமேனியாவுக்கான இலங்கையின் தூதுவர் (ஏற்கனவே பதவியேற்றுள்ளார்).
5. என்.ஐ.டி. பரணவிதான – எத்தியோப்பியா மற்றும் ஆப்பிரிக்க ஒன்றியத்திற்கான இலங்கையின் தூதுவர் மற்றும் நிரந்தரப் பிரதிநிதி.
6. எஸ்.கே. சந்திரசிறி – இஸ்ரேலுக்கான இலங்கையின் தூதுவர்.
7. தம்மிக பெர்னாண்டோ – கென்யாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர்.
8. அநுர விதானகே – லெபனானுக்கான இலங்கையின் தூதுவர்.
9. பேராசிரியர் எம்.ஐ. பஸீஹா அஸ்மி – ஈரானுக்கான இலங்கையின் தூதுவர்.
10. எம். பாரூக் எம். பௌசர் – பாலஸ்தீனத்திற்கான இலங்கைப் பிரதிநிதி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

விசேட தேவையுடையோருக்கென பிரத்தியேக பஸ் சேவை

வேலைத்திட்டத்தின் கீழ் விசேட தேவையுடைவர்களுக்கான முன்னுரிமை அடிப்படையிலான பஸ் சேவைக்கான பஸ்கள்...

இலங்கையின் சனத்தொகை மாற்றம்: காலநிலை மாற்றம் மற்றும் கொள்கை குறைபாடுகளால் ஏற்படும் சமூக-பொருளாதார நெருக்கடிகள்

இலங்கை ஒரு விரைவான சனத்தொகை மாற்றத்தை எதிர்கொண்டு வருகின்றது. தற்போது நாட்டின்...

பிலிப்பைன்சின் நெல் ஆராய்ச்சி நிலையத்திற்கு பிரதமர் விஜயம்

பிலிப்பைன்சின் சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனத்தை பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய...

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையும் அதிகரிப்பு

லாஃப்ஸ் கேஸ் நிறுவனம் நேற்று (11) நள்ளிரவு முதல் அமலுக்கு வரும்...