ஈரானுக்குச் சொந்தமான IRIS Bushehr கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் நுழைவதற்கும், திருகோணமலை துறைமுகத்திற்கு வருவதற்கும் இலங்கை அரசு எடுத்துள்ள புவிசார் அரசியல் தீர்மானம் தொடர்பில் சமூக ஆர்வலர் எம்.என். முஹம்மத் அவர்கள் தனது முகப்புத்தகத்தில் முக்கிய பதிவு ஒன்றை இட்டுள்ளார்.
அதில், நாடு தற்போது எதிர்நோக்கியுள்ள சவாலான சூழலில் மக்கள், அரசு மற்றும் எதிர்க்கட்சிகள் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது குறித்து அவர் விரிவாக விளக்கியுள்ளார்.
ஈரானிய கப்பலில் உள்ள அனைவரையும் பாதுகாப்பாக கடற்படை முகாமிற்கு அழைத்து வரவும், அக்கப்பலை உலகின் பாதுகாப்பான இயற்கை துறைமுகமான திருகோணமலைக்கு கொண்டு செல்லவும் அரசு தீர்மானித்துள்ளது.
இந்த நடவடிக்கை இந்தத் தீர்மானம் மிகவும் ஆபத்தானது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய உளவு அமைப்புகள் இலங்கையின் இந்த நிலைப்பாட்டை பலத்த சந்தேகத்துடன் நோக்கக்கூடும்.
1942-இல் இரண்டாம் உலகப் போரின் போது திருகோணமலை துறைமுகம் தாக்குதலுக்குள்ளானதை நாம் மறந்துவிடக் கூடாது. நாம் படிப்படியாக ஒரு போருக்குள் தள்ளப்படுகிறோமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுவது நியாயமானது.
இந்தத் தீர்மானம் கடினமானது என்றாலும், அரசாங்கம் காட்டியுள்ள துணிச்சலைப் பாராட்ட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
“இது வெறும் அரசியல் நகர்வு மட்டுமல்ல, மிக முக்கியமான புவிசார் அரசியல் தீர்மானம். இதனைப் புரிந்துகொள்வதற்கு சிலருக்கு சக்தி இல்லாமல் இருக்கலாம். ஆனால், இந்த நேரத்தில் நாம் அரசாங்கத்திற்கு பக்கபலமாக இருக்க வேண்டும்.”
மேலும் இக்கட்டான இந்தச் சூழலை அரசியல் இலாபத்திற்காகப் பயன்படுத்த வேண்டாம் என எதிர்க்கட்சிகளுக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்
நாட்டின் பாதுகாப்பைக் கருதி அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட வேண்டும். சுயநலமாகச் செயற்பட்டால் சர்வதேச சமூகம் கூட மன்னிக்காது.
யுத்தம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், விமர்சனங்களை விடுத்து ஒவ்வொரு இலங்கையரும் பொறுப்புடன் செயல்பட வேண்டிய தருணம் இதுவென அவர் வலியுறுத்தியுள்ளார்.
அரசு, எதிர்க்கட்சி மற்றும் மக்கள் என மூவரும் ஒருமித்த கருத்துடன் இந்தச் சவாலை எதிர்கொள்ள வேண்டும் என்பதே அவரது பதிவின் முக்கிய சாரமாகும்.
-எம்.என். முஹம்மத்
