எரிபொருள் விலை கட்டுப்பாடு: அரசாங்கத்தின் விசேட மானியம் :

Date:

சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்துள்ள போதிலும், உள்நாட்டில் விலையை அதிகரிக்காமல் இருக்க அரசாங்கம் முன்வந்துள்ளது.

இதன்படி, இறக்குமதியாளர்களுக்கு பெற்றோல் ஒக்டேன் 92 லீற்றருக்கு ரூ. 20, ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றுக்கு ரூ. 100 மானியமாக வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்தும் குறித்த எரிபொருட்களின் விலைகளை கட்டுப்படுத்த அரசாங்கம் இந்நடவடிக்கையை எடுத்துள்ளது.

அதற்கயைம 2026 மார்ச் 22 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில், உரிய விற்பனை விலையிலும் இறக்குமதி செய்யப்படும் விலை அதிகமாக இருப்பின், எரிபொருள் இறக்குமதி விநியோகஸ்தர்களுக்கு குறித்த தொகையை செலுத்துவதன் மூலம் மக்களுக்கு இம்மானியம் வழங்கப்படவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

தரம் 2 – 11 ஆம் வகுப்பு வரை மாணவர்களைச் சேர்க்க புதிய வழிகாட்டல்!

மாணவர்களை பாடசாலையில் சேர்ப்பது குறித்து புதிய சுற்றுநிரூபமொன்று வெளியிடப்பட்டுள்ளது. 5 மற்றும்...

தமது எரிபொருள் ஒதுக்கீடுகளை மூன்றில் ஒரு பங்கிற்கும் மேலாக குறைத்த அமைச்சர்கள்!

அமைச்சரவை அமைச்சர்களும் பிரதி அமைச்சர்களும் தாமாக முன்வந்து தமது எரிபொருள் ஒதுக்கீடுகளை...

மாபெரும் ஆளுமை ரிஸ்வி ஷெரீப் அவர்களின் மறைவு நாட்டிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு:ரவூப் ஹக்கீம் எம்.பி ஆழ்ந்த இரங்கல்

மருத்துவப் பேராசிரியரும், இலங்கையின் சிறுநீரகவியல் துறையின் தந்தையுமான வித்யா ஜோதி பேராசிரியர்...

உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பு!

இன்று (31) நள்ளிரவு முதல் பல உணவுப் பொருட்களின் விலைகள் உயர்த்தப்படும்...