எரிவாயு தட்டுப்பாடு ஏற்படாது : ஜனாதிபதி உறுதி: மேலதிக தேவைகளுக்காக ஏற்கெனவே ஒப்பந்தம்

Date:

மார்ச் மாதத்திற்காக 38,000 மெட்ரிக் தொன் லிட்ரோ சமையல் எரிவாயு ஏற்கனவே வந்தடைந்துள்ளதோடு, இன்னும் இரண்டு நாட்களில் மேலும் 33,000 மெட்ரிக் தொன் எரிவாயு எதிர்பார்க்கப்படுவதாக விசேட ஊடக சந்திப்பில் உரையாற்றிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

மார்ச் மாதத்திற்கான உள்நாட்டு எரிவாயு தேவை 33,000 மெட்ரிக் தொன்னாக இருந்தபோதிலும், இத்துறையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்று சந்தைக்கு போதிய கையிருப்புகளை வெளியிடாத காரணத்தால், அதிகாரிகள் 38,000 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஓடர் செய்துள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இதேவேளை தமிழ் சிங்களப் புத்தாண்டு காலத்திலும் தட்டுப்பாடுகளின்றி எரிவாயுவை விநியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்தன தெரிவித்தார்.

 

Popular

More like this
Related

‘உலகிலேயே மிகச்சிறந்த சுற்றுலாத்தலம் இலங்கை தான்’: வசீம் அக்ரம் புகழாரம்!

உலகிலேயே மிகச்சிறந்த சுற்றுலாத்தலமாக தரப்படுத்தப்படுவதற்கு தகுதியான ஒரு நாடாக இலங்கை விளங்குவதாக...

ஹிஜ்ரி 1448 புத்தாண்டு வழங்கும் செய்தி: இடப்பெயர்வின் வரலாறும் நாட்காட்டியின் முக்கியத்துவமும்!

-Ash-sheikh Hassan Sulaiman (Naleemi) - (fb) காலச்சக்கரத்தின் சுழற்சியில் மற்றுமொரு ஹிஜ்ரி...

கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார கைது

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார,...