ஓமான் வாழ் இலங்கையர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு: ஓமான் வெளிவிவகார அமைச்சருடன் விஜித ஹேரத் கலந்துரையாடல்!

Date:

இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் ஓமான் வெளிவிவகார அமைச்சர் சையத் பத்ர் அல் புசைதி ஆகியோருக்கு இடையில் இன்று தொலைபேசி ஊடான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இதன்போது பிராந்தியத்தில் நிலவும் தற்போதைய சூழ்நிலைகள் குறித்துக் கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டதுடன், பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்காக இலங்கையின் அர்ப்பணிப்பு மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது.

ஓமானில் வசிக்கும் இலங்கைச் சமூகத்தினருக்கு அந்நாடு வழங்கி வரும் தொடர்ச்சியான ஆதரவிற்காக அமைச்சர் விஜித ஹேரத் தனது நன்றியைத் தெரிவித்தார்.

ஓமானில் உள்ள இலங்கையர்களின் நலன்புரி மற்றும் நல்வாழ்வுக்காக ஓமான் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயல்படும் என அமைச்சர் அல்பூசைதி இதன்போது உறுதியளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

இலங்கையிலுள்ள அமெரிக்கர்களுக்குத் தூதரகம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய சூழ்நிலைக்கு மத்தியில், புதிய பாதுகாப்புத் தகவல்களைப்...

இலங்கை எடுத்துள்ள தீர்மானம் ஆபத்தானது, ஆனால் துணிச்சலானது!

ஈரானுக்குச் சொந்தமான IRIS Bushehr கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் நுழைவதற்கும்,...

ஈரானிய வீரர்களை மீட்டது இலங்கையின் சிறந்த வெளியுறவுக் கொள்கையின் அடையாளம்: அலி சப்ரி பாராட்டு

ஈரானிய வீரர்களை மீட்டெடுத்தமை மற்றும் அந்த கப்பலுக்கு இலங்கைக் கடற்பரப்பில் அனுமதி...

சதாம் உசேன் முதல் அலி கமேனி வரை: அமெரிக்காவின் இரட்டை வேடமும் சர்வதேச நீதியும்.

'அல்லாஹ்வின் பாதையில் இறந்தவர்களை 'மரணித்தவர்கள்' என்று கூறாதீர்கள். ஏனெனில் அவர்கள் உயிருடனேயே...