தினமும் பல மணிநேரங்களுக்கு நீர் விநியோகத்தில் தடை

Date:

நாட்டில் தற்சமயம் நிலவும் வறட்சியமான மற்றும் குறைந்த மழை வீழ்ச்சிப் பதிவு காரணமாக அடுத்த இரண்டு முதல் மூன்று வாரங்களுக்கு தினமும் பல மணிநேரங்களுக்கு நீர் விநியோகத்தைக் கட்டுப்படுத்த வேண்டியிருக்கலாம் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச்  சபையின்  தலைவர் சந்தன பண்டார தெரிவித்துள்ளார்.

அத்தகைய நீர் விநியோகத் தடைகள் இன்னும் அமுல்படுத்தப்படவில்லை என்றாலும், தற்போதைய வானிலை நிலவரத்தால் வரும் காலத்தில் 24 மணி நேரமும் தொடர்ச்சியான நீர் விநியோகத்தைப் பராமரிப்பது கடினமாகலாம் என்றும் அவர் இன்று (30) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கூறினார்.

அம்பத்தளை உள்ளிட்ட நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் உற்பத்தித் திறன் இதுவரை பாதிக்கப்படவில்லை என்றாலும், உயரமான பகுதிகளுக்கான நீர் விநியோகம் ஏற்கனவே குறைந்த அழுத்த நிலையில் உள்ளது.

எனவே, பொது மக்கள் தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்திய சந்தன பண்டார, குறைந்த அழுத்த நீர் விநியோகம் உள்ள பகுதிகளில் நீர் விநியோகம் தற்போது டேங்கர் லொறிகள் மூலமாக வழங்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

பாடசாலைகளுக்கு வாரத்திற்கு 4 நாட்கள் மாத்திரம் அனுமதி!

உலகளாவிய எரிசக்தி நெருக்கடிக்கு மத்தியில், பாடசாலைகளின் நிர்வாகம் மற்றும் கற்றல்-கற்பித்தல் செயற்பாடுகளைத்...

அடையாளம் தெரிந்தும் இலக்கு வைக்கப்பட்ட ஊடக வாகனம்: பெண் ஊடகவியலாளர் பாத்திமா படூனி படுகொலை!

தெற்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 'அல் மயாடீன்' செய்தி...

36 வருடங்களின் பின் குருக்கள்மடம் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் ஆரம்பம்!

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடம் பகுதியில் சந்தேகத்திற்கிடமான மனிதப்...

ஏப்ரல் 1 முதல் மின்சாரக் கட்டணத்தில் மாற்றம்!

2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணங்களைத் திருத்தம் செய்வதற்கு...