20 ஆயிரம் ரூபாவை இலஞ்சமாக பெற்ற அரச அதிகாரிகள் கைது

Date:

20 ஆயிரம் ரூபாவை இலஞ்சமாக பெற்ற இரு அரச அதிகாரிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். திருகோணமலை மாநகர சபையின் தீயணைப்பு பிரிவில் கடமையாற்றும் தீயணைப்பு அதிகாரி மற்றும் மீட்பு பணியாளர் ஒருவர் இவ்வாறு இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைதாகியுள்ளனர்.

கந்தளாய் பகுதியைச் சேர்ந்த ஒருவர் முன்வைத்த முறைப்பாட்டிற்கமைய இந்த கைது இடம்பெற்றுள்ளது. 2026ம் ஆண்டுக்கென சுற்றுலா உணவகமொன்றிற்கு தீ பாதுகாப்பு உத்தரவாத சான்றிதழை வழங்குவதற்காக இந்த இலஞ்ச பணம் கோரப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் 40 ஆயிரம் ரூபாவை கோரிய போதிலும் அதனை 35000 மாக குறைத்துள்ளனர். அதில் 20 ஆயிரம் ரூபாவை இரண்டாம் கட்டமாக பெறும் சந்தர்ப்பத்திலேயே இவர்கள் கைதாகியுள்ளனர்.

சந்தேக நபர்கள் திருகோணமலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து 20ம் திகதி வரை விளக்கமறியல் வைக்கப்பட்டனர்.

Popular

More like this
Related

அல்குர்ஆன் வசனங்களின் எழில்மிகு வடிவங்கள்:தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் அல்-குர்ஆனிய அறிவியல் அரபு எழுத்தணி போட்டி மற்றும் கண்காட்சி!

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அரபு மொழிப் பீடத்தின்...

காசாவில் இஸ்ரேலின் தீவிர வான் தாக்குதல்: ஹமாஸ் ஆயுதப்பிரிவு தளபதி இஸ் அல்-தின் அல்-ஹத்தாத் குறிவைப்பு!

மேற்கு காசா நகரிலுள்ள ரிமால் பகுதியில் இஸ்ரேல் நடத்திய அடுத்தடுத்த வான்வழித்...

78 ஆண்டுகால நக்பா பேரவலம்: பூர்வீக நிலத்திற்காக ஏங்கும் பாலஸ்தீனர்கள்!

மே 15, பாலஸ்தீன வரலாற்றில் என்றும் மறக்க முடியாத ஒரு கருப்பு...

இறக்குமதி வாகனங்களுக்கான இறக்குமதி சுங்க வரியில் மாற்றம்

இறக்குமதி வாகனங்களுக்கான இறக்குமதி சுங்க வரி மறுசீரமைக்கப்பட்டுள்ளது. இறக்குமதி தீர்வை வரி...