36 வருடங்களின் பின் குருக்கள்மடம் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் ஆரம்பம்!

Date:

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடம் பகுதியில் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி காணப்படுவதாகக் கருதப்படும் இடத்தில் 36 ஆண்டுகளுக்கு பின்னர் நீதிமன்ற உத்தரவுக்கமைய இன்று (30 ) அகழ்வுப் பணிகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

1990ஆம் ஆண்டு ஜுலை மாதம் 12ஆம் திகதி புனித ஹஜ் கடமையை நிறைவேற்றிவிட்டு கல்முனை வழியாக காத்தான்குடியை நோக்கி வந்துகொண்டிருந்த போது குருக்கள்மடத்தில் வைத்து விடுதலைப் புலிகளால் கடத்திச் செல்லப்பட்டு படுகொலை செய்து புதைக்கப்பட்டதாக அடையாளம் காணப்பட்டுள்ள பகுதியில் தோண்டுமாறு களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்ற நீதிபதியின் உத்தரவின் பேரில் நீதிபதியின் மேற்பார்வையில் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது.

மேற்குறித்த பகுதியில் சட்டத்தரணிகள் துறைசார் அதிகாரிகள் ஊடகவியலாளர்கள் காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

இப்பகுதி பூராகவும் தற்போது பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

அல்குர்ஆன் வசனங்களின் எழில்மிகு வடிவங்கள்:தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் அல்-குர்ஆனிய அறிவியல் அரபு எழுத்தணி போட்டி மற்றும் கண்காட்சி!

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அரபு மொழிப் பீடத்தின்...

காசாவில் இஸ்ரேலின் தீவிர வான் தாக்குதல்: ஹமாஸ் ஆயுதப்பிரிவு தளபதி இஸ் அல்-தின் அல்-ஹத்தாத் குறிவைப்பு!

மேற்கு காசா நகரிலுள்ள ரிமால் பகுதியில் இஸ்ரேல் நடத்திய அடுத்தடுத்த வான்வழித்...

78 ஆண்டுகால நக்பா பேரவலம்: பூர்வீக நிலத்திற்காக ஏங்கும் பாலஸ்தீனர்கள்!

மே 15, பாலஸ்தீன வரலாற்றில் என்றும் மறக்க முடியாத ஒரு கருப்பு...

இறக்குமதி வாகனங்களுக்கான இறக்குமதி சுங்க வரியில் மாற்றம்

இறக்குமதி வாகனங்களுக்கான இறக்குமதி சுங்க வரி மறுசீரமைக்கப்பட்டுள்ளது. இறக்குமதி தீர்வை வரி...