IMF பிரதிநிதிகள் குழு இந்த மாத இறுதியில் இலங்கை வருகை!

Date:

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இந்த மாத இறுதியில் இலங்கைக்கு வருகை தரவுள்ளது.

இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் வழங்கும் நீடிக்கப்பட்ட நிதி வசதியின் 6 ஆவது கடன் தவணையை விடுவிப்பதற்கு முன்னதாக நடத்தப்படும் மீளாய்வு பேச்சுவார்த்தைகளுக்காகவே அவர்கள் வருகை தரவுள்ளதாக நிதிப் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இது குறித்த மேலதிக விபரங்கள், சர்வதேச நாணய நிதியம் இதுவரை 05 கடன் தவணைகளை இலங்கைக்கு வழங்கியுள்ளது.

நாட்டின் பொருளாதாரச் செயற்பாடுகள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அமைய அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து இதன்போது விரிவாக மீளாய்வு செய்யப்படும்.

இந்த மீளாய்வைத் தொடர்ந்து, ஆறாவது கடன் தவணையை விடுவிப்பது தொடர்பான அவசியமான உடன்பாடுகள் எட்டப்படும் என கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

புத்தாண்டு என்பது பண்டிகை மட்டுமல்ல, எமது கலாசார விழுமியங்களில் பொதிந்துள்ள சுபீட்சம், ஒற்றுமை, சகவாழ்வு: பிரதமரின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி!

சூரியன் மீன இராசியிலிருந்து மேஷ இராசிக்குச் சங்கமிப்பதையும், அறுவடைப் பணிகள் நிறைவடைந்து...

கூட்டுச் செயல்பாடுகள் மூலம் வெளிப்படும் சமூக-கலாசார பிணைப்புடன் இந்த புத்தாண்டு அமைய நல்வாழ்த்துகள்: ஜனாதிபதியின் புத்தாண்டு செய்தி

பௌதீக ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் மாற்றம் பெறுவதை அடையாளப்படுத்தும் சிங்கள மற்றும்...

அமைதிப்பேச்சு: பாகிஸ்தான் சென்றார் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ்: பாகிஸ்தானில் உற்சாக வரவேற்பு.

ஈரான் உடனான அமைதிப் பேச்சுவார்த்தையை மேற்கொள்ள பாகிஸ்தான் வந்த அமெரிக்க துணை...

வாகனங்களுக்கான எரிபொருள் QR முறைமை நீக்கம்?

புத்தாண்டு காலத்தை முன்னிட்டு, இன்று (11) முதல் எதிர்வரும் 18ஆம் திகதி...