இலங்கையின் பொருளாதார மறுசீரமைப்பு தொடர்பான மிக முக்கியமான பேச்சுவார்த்தைகளுக்காக சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு இன்று (26) நாட்டை வந்தடையவுள்ளது.
விரிவான நிதி வசதியின் (EFF) கீழ் 5வது மற்றும் 6வது மீளாய்வுகளை (Reviews) நிறைவு செய்வதற்கான கொள்கை ரீதியான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்தல்.
இந்த குழுவினர் இன்று முதல் ஏப்ரல் 9 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருந்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளனர்.
இந்த மீளாய்வுகள் வெற்றிகரமாக நிறைவடையும் பட்சத்தில், அடுத்தகட்ட நிதியுதவிகள் கிடைப்பதற்கான வழிவகைகள் ஏற்படும்.
