MPL-2026 சாம்பியனாக வெஸ்டர்ன் வொரியர்ஸ் அணி தெரிவு

Date:

ஈதுல் பித்ர் நோன்பு பெருநாளை முன்னிட்டு தெல்தோட்டை, மெதகெகில ஸ்ரேன்ஜர்ஸ் விளையாட்டு கழகத்தினால் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்ட “மெதகெகில பிரீமியர் லீக்” மென்பந்து கிரிக்கெட் சுற்றுத்தொடர் அண்மையில் நிறைவுக்கு வந்தது.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தத் தொடரின் இறுதிப் போட்டியில், பெரோனி தலைமையிலான வெஸ்ட்டர்ன் வொரியர்ஸ் (Western Warriors) அணி சாம்பியன் பட்டத்தைச் சூடிக்கொண்டது.

கடந்த மார்ச் மாதம் 22 மற்றும் 23 ஆகிய திகதிகளில் மெதகெகில ஸ்ரேன்ஜர்ஸ் விளையாட்டு மைதானத்தில் இப்போட்டிகள் இடம்பெற்றன.

இறுதிப் போட்டியில் பெரோனி தலைமையிலான வெஸ்ட்டர்ன் வொரியர்ஸ் அணியும், அஜ்மீர் தலைமையிலான புலட் பிரதர்ஸ் (Bullet Brothers) அணியும் மோதின.

ஆரம்பம் முதலே அதிரடி காட்டிய வெஸ்ட்டர்ன் வொரியர்ஸ் அணி, இறுதிப் பந்துவரை நீடித்த விறுவிறுப்பான ஆட்டத்தில் 06 ஓட்டங்கள் வித்தியாசத்தில் புலட் பிரதர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி வாகை சூடியது.

தொடர் முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வீரர்களுக்கு கௌரவங்கள் வழங்கப்பட்டன:

  • தொடரின் நாயகன்: மனாசிர் (புலட் பிரதர்ஸ்)

  • இறுதிப் போட்டியின் நாயகன்: ரஸீன் (வெஸ்ட்டர்ன் வொரியர்ஸ்)

  • சிறந்த துடுப்பாட்ட வீரர்: ரஸீன் (வெஸ்ட்டர்ன் வொரியர்ஸ்)

  • சிறந்த பந்து வீச்சாளர்: அஜ்மீர் (புலட் பிரதர்ஸ் அணியின் தலைவர்)

வெற்றி பெற்ற அணிக்கும், திறமைகளை வெளிப்படுத்திய வீரர்களுக்கும் விளையாட்டு ரசிகர்கள் மற்றும் ஊர் மக்கள் தமது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

காசாவில் நெஞ்சை உலுக்கும் கொடூரம்: தந்தையை மிரட்ட குழந்தையை சித்திரவதை செய்த இஸ்ரேலியப் படை!

காசா முனையில் நிலவும் போர்ச் சூழலில், மனிதநேயமற்ற முறையில் ஒரு வயதுக்...

சுயதொழில் உபகரணங்கள் மற்றும் கல்வி நிதியுதவி வழங்கி வைப்பு: பஹன மீடியாவின் மற்றுமோர் மனிதாபிமானப் பணி

இலங்கையில் ஊடகப்பணியைத் தாண்டி, சமூக மேம்பாட்டுப் பணிகளிலும் பஹன மீடியா நிறுவனம்...

கடும் வெப்பமான வானிலை அடுத்த மாதம் வரை நீடிக்கும்.

நாட்டில் தற்போது நிலவும் கடும் வெப்பமான வானிலை எதிர்வரும் ஏப்ரல் மாதம்...

கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை விரைவாக அழிப்பது தொடர்பில் கலந்துரையாடல்

கைப்பற்றப்பட்ட போதைப்பொருளை விரைவாக அழிக்கும் பணிகளில் ஏற்பட்டுள்ள சட்டச் சிக்கல்களை நீக்குவதற்குத்...