ஈரானின் ட்ரோன் தாக்குதலில் இருவர் காயமடைந்ததாக ஈரானுக்கு அசர்பைஜான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஈரான் நாட்டின் ட்ரோன்கள், எல்லைதாண்டி அசர்பைஜான் நாட்டுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியதில் இருவர் காயமடைந்ததாக ஈரானுக்கு அஜர்பைஜான் வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தத் தாக்குதல் குறித்து ஈரான் இஸ்லாமிய குடியரசு தெளிவுபடுத்தி, விளக்கமளிக்க வேண்டும். எதிர்காலத்தில் மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்கத் தேவையான அவசர நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்” என்று அசர்பைஜான் வெளியுறவு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
மேலும், ஈரானுக்கு எதிராக பதிலடி நடவடிக்கை எடுக்கும் உரிமையைக் கொண்டுள்ளதாகவும் அஜர்பைஜான் கூறியுள்ளது.
