ஈரானில் தயாரிக்கப்பட்ட 6 வகையான மருந்துகளை இறக்குமதி செய்ய திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
இலங்கைக்கு அத்தியாவசியமாக தேவைப்படும் 6 வகையான மருந்துகள் ஈரானில் தயாரிக்கப்படுவதாகவும் மத்திய கிழக்கு யுத்தம் காரணமாக குறித்த மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார பிரதியமைச்சர் வைத்தியர் ஹங்சன விஜயமுனி தெரிவித்துள்ளார்.
யுத்தத்திற்கு முன்னர் கொண்டுவரப்பட்ட மருந்துகள் போதுமானளவு கையிருப்பில் உள்ள நிலையில் நாட்டிற்கு தேவையான அடுத்த கட்ட மருந்து தொகை ஈரானில் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றை கொண்டு வருவதற்கு பிரதான திட்டத்திற்கு மேலதிகமாக இரண்டாம் மட்ட திட்டமொன்றை நடைமுறைப்படுத்தவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
