2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணங்களைத் திருத்தம் செய்வதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) ஏகமனதாகத் தீர்மானித்துள்ளது. இந்த மின்சாரக் கட்டணத் திருத்தம் ஏப்ரல் மாதம் 1 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும்.
மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட 13.56% கட்டண அதிகரிப்பு யோசனைக்கு அமைவாக, திருத்தப்பட்ட புதிய கட்டண விபரங்கள் வருமாறு:
-
0 – 30 அலகுகள்: 4.3% அதிகரிப்பு (மாதாந்தக் கட்டணம் 15 ரூபாவால் உயர்வு).
-
31 – 60 அலகுகள்: 6.9% அதிகரிப்பு (மாதாந்தக் கட்டணம் 45 ரூபாவால் உயர்வு).
-
61 – 91 அலகுகள்: 6.9% அதிகரிப்பு.
-
91 – 180 அலகுகள் (மூன்று பிரிவுகள்): 7.2% அதிகரிப்பு.
-
180 அலகுகளுக்கு மேல்: 25% அதிகரிப்பு.
2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான இந்த மின்சாரக் கட்டணத் திருத்த யோசனையை இலங்கை மின்சார சபை கடந்த பெப்ரவரி 13 ஆம் திகதி பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்திருந்தது.
