ஏப்ரல் 1 முதல் மின்சாரக் கட்டணத்தில் மாற்றம்!

Date:

2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணங்களைத் திருத்தம் செய்வதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) ஏகமனதாகத் தீர்மானித்துள்ளது. இந்த மின்சாரக் கட்டணத் திருத்தம் ஏப்ரல் மாதம் 1 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும்.

மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட 13.56% கட்டண அதிகரிப்பு யோசனைக்கு அமைவாக, திருத்தப்பட்ட புதிய கட்டண விபரங்கள் வருமாறு:

  • 0 – 30 அலகுகள்: 4.3% அதிகரிப்பு (மாதாந்தக் கட்டணம் 15 ரூபாவால் உயர்வு).

  • 31 – 60 அலகுகள்: 6.9% அதிகரிப்பு (மாதாந்தக் கட்டணம் 45 ரூபாவால் உயர்வு).

  • 61 – 91 அலகுகள்: 6.9% அதிகரிப்பு.

  • 91 – 180 அலகுகள் (மூன்று பிரிவுகள்): 7.2% அதிகரிப்பு.

  • 180 அலகுகளுக்கு மேல்: 25% அதிகரிப்பு.

2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான இந்த மின்சாரக் கட்டணத் திருத்த யோசனையை இலங்கை மின்சார சபை கடந்த பெப்ரவரி 13 ஆம் திகதி பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்திருந்தது.

Popular

More like this
Related

தென்மேற்கு பருவப்பெயர்ச்சி ஆரம்பம்: பல பகுதிகளில் 75 மி.மீ. இற்கும் அதிக மழை

தென்மேற்கு பருவப்பெயர்ச்சி நாடு முழுவதும் கட்டம் கட்டமாக நிலைகொண்டு வருவதால் நாட்டின்...

ஹஜ் 2026: இலங்கை யாத்திரிகர்களின் நலன்களை ஆராய சவூதி சென்றடைந்தார் பிரதி அமைச்சர் முனீர் முலப்பர்!

இலங்கையின் முஸ்லிம் சமய, பண்பாட்டலுவல்கள் பிரதி அமைச்சரும், ஹஜ் தூதுவருமான கௌரவ...

தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகருடன் H. அப்துர் ரகீப் அவர்கள் நேரில் சந்திப்பு: இஸ்லாமிய நூல்கள் அன்பளிப்பு!

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் முன்னாள் மாநிலத் தலைவரும், தற்போதைய மத்திய...

மூளைக்காய்ச்சல் குறித்து பொதுமக்களை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை

தெனியாய பகுதியில் உள்ள சில பாடசாலைகளில் பதிவாகியிருந்த மூளைக்காய்ச்சல் நோய், தற்போது...