காசாவில் நெஞ்சை உலுக்கும் கொடூரம்: தந்தையை மிரட்ட குழந்தையை சித்திரவதை செய்த இஸ்ரேலியப் படை!

Date:

காசா முனையில் நிலவும் போர்ச் சூழலில், மனிதநேயமற்ற முறையில் ஒரு வயதுக் குழந்தையை இஸ்ரேலிய வீரர்கள் சித்திரவதை செய்துள்ளதாக TRT  வெளியிட்டுள்ள புலனாய்வு அறிக்கை உலகையே உலுக்கியுள்ளது.

 ஜவாத் அபு நாசர் (Jawad Abu Nasser) என்ற ஒன்றரை வயதுக் கூட நிரம்பாத அக்குழந்தையின் தந்தையை வலுக்கட்டாயமாக வாக்குமூலம் அளிக்க வைப்பதற்காக, இஸ்ரேலியப் படையினர் அக்குழந்தையை ஒரு கருவியாகப் பயன்படுத்தியுள்ளனர். தந்தை கண்முன்னாலேயே அக்குழந்தையைச் சித்திரவதை செய்து அவமானப்படுத்தியுள்ளனர்.

இச்சம்பவத்தின் போது ஜவாத் அணிந்திருந்த சிறிய கால்சட்டை, தற்போது அக்குழந்தை அனுபவித்த கொடுமைகளுக்கு மௌன சாட்சியாக நிற்கிறது.

அக்குழந்தை அனுபவித்த சொல்லொணாத் துயரத்தைப் பிரதிபலிக்கும் வகையில், அந்தக் கால்சட்டையில் இரத்தக் கறைகள் படிந்துள்ளன.

ஒரு கூர்மையான உலோகக் கம்பி அல்லது ஆணி கொண்டு குழந்தையின் காலில் குத்தப்பட்டுள்ளது. அதன் துளைகள் கால்சட்டை மற்றும் குழந்தையின் தசை இரண்டையும் ஊடுருவிச் சென்றுள்ளதை அந்தத் துணி காட்டுகிறது.

அக்குழந்தையின் மென்மையான கால்களில் சிகரெட்டுகளை அணைத்துச் சித்திரவதை செய்ததற்கான தீக்காய அடையாளங்களும் அந்தக் கால்சட்டையில் தெளிவாகத் தெரிகின்றன.

ஒன்றரை வயதே ஆன ஒரு பச்சிளம் குழந்தையைச் சித்திரவதை செய்வதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது என மனித உரிமை ஆர்வலர்கள் கொந்தளித்துள்ளனர். ஜவாத்தின் இந்தக் கிழிந்த கால்சட்டை, காசாவில் நடக்கும் போர் அநீதிகளின் வலுவான ஆதாரமாகப் பார்க்கப்படுகிறது.

Popular

More like this
Related

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் பாக்கியராஜ் மாரடைப்பால் மரணம்

பிரபல நடிகரும் இயக்குனருமான கே.பாக்கியராஜ் மாரடைப்பு காரணமாக இன்று மரணமடைந்துள்ளார். சென்னையிலுள்ள...

50,000 கடந்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை

நாட்டில் டெங்கு நோய்த்தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் பதிவான டெங்கு நோயாளர்களின்...

குற்றவாளி தப்பியோட போலி கடவுச்சீட்டு: ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட உதவி செயலாளர் கைது

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி ஒருவர் நாட்டை விட்டு தப்பிச் செல்வதற்காக வேறு ஒருவரின்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...