சதாம் உசேன் முதல் அலி கமேனி வரை: அமெரிக்காவின் இரட்டை வேடமும் சர்வதேச நீதியும்.

Date:

சட்டதரணி மாஸ் எல் யூசுஃப் எல்எல்பி

‘அல்லாஹ்வின் பாதையில் இறந்தவர்களை ‘மரணித்தவர்கள்’ என்று கூறாதீர்கள். ஏனெனில் அவர்கள் உயிருடனேயே இருக்கின்றார்கள்.ஆனால் அதை நீங்கள் அறிவதில்லை –திருக்குர்ஆன் 2:154

எல்லோராலும் ‘நல்லவர்’ என்று போற்றப்பட்ட ஒரு மனிதர் கூட உலகில் தோன்றியதில்லை.

புத்தர், யேசு, முஹம்மது நபி போன்றவர்களும் இதற்கு விதிவிலக்கல்ல. இவர்களையும் போற்றியவர்கள் போன்றே தூற்றியவர்களும் அன்றும் இருந்தனர். இன்றும் இருக்கின்றனர்.

2006 டிசம்பர் 30 ஈராக் ஜனாதிபதி சதாம் ஹூசேன் தூக்கிலிடப்பட்டார். அது விடயமாக துக்கம் அனுசரித்தவர்கள் போன்றே குதூகலித்தவர்களும் இருந்தனர்.

ஈராக்கில் அமெரிக்காவால் நிறுவப்பட்ட ஒரு விசேட நீதிமன்றம், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களை சதாம் செய்ததாகக் குற்றம்சாட்டி அவருக்கு தூக்கு தண்டனை அழித்தது.

இருப்பினும், எம்னஸ்டி இன்டர்நேஷனல் மற்றும் ஹியுமன் ரயிட்ஸ் வொச் போன்ற மனித உரிமை அமைப்புகள் அத்தீர்ப்பை கடுமையாக விமர்சித்தன.

பிரதிவாதியான சதாமுக்கு தன்புறத்து நியாயத்தை முன்வைக்க போதுமான சட்ட வசதிகள் வழங்கப்படவில்லை என்பதோடு விசாரணையை துரிதப்படுத்தி நீதிபதிகள் மீது அரசியல் அழுத்தமும் கொடுக்கப்பட்டமை உலகறியும். அந்த வகையில, சதாம் உசேனின் மரண தண்டனை சட்டரீதியானதா இல்லையா என்பது இன்றளவிலும் விவாதத்திற்குரியதே.

அமெரிக்கா எப்போதும் இரண்டு முகங்களைக் காட்டி வருவது உலகறிந்ததே.

ஈரானுடனான மோதலில் இஸ்ரேலுடன் தோளோடு தோள் நிற்கும் அமெரிக்கா, இஸ்ரேலின் போர்க்குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை, சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் கடுமையான மீறல்கள் மற்றும் பாலஸ்தீன பிரதேசங்களை வலுக்கட்டாயமாக இணைத்தல் போன்ற சர்வதேச சட்ட மீறல்களை கண்டுகொள்வதில்லை.

அரசை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்பவர்களை ஈரான் அடக்குவதாக குற்றம் சாட்டும் அமெரிக்கா, காஸாவில் நெதன்யாகுவின் கொடூரமான இனப்படுகொலையை முழுமையாக ஆதரிக்கிறது.

2026 பிப்ரவரி 28 அன்று, அமெரிக்காவும் இஸ்ரேலும் கூட்டாக ஈரானிய இலக்குகள் மீது குண்டுவீச்சுத் தாக்குதல்களைத் தொடங்கின. பாரிய அளவில் மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதல்களின் போது ஈரான் இஸ்லாமியக் குடியரசின் அதியுயர் ஆன்மிகத் தலைவர் அலி கமேனி கொல்லப்பட்டார்.

அவர் 1989 முதல் ஈரானின் இரண்டாவது அதியுயர் ஆன்மிகத் தலைவராக இருந்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

ஜூன் 1989 இல், ஈரானிய புரட்சியின் தந்தையான ஆயத்துல்லா ருஹோல்லா கொமேனியின் மரணத்திற்குப் பிறகு, அலி காமெனி ஒரு விஷேட சபையால் அதியுயர் ஆன்மிகத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அவர் முன்பு ஈரானின் ஜனாதிபதியாகவும் இரு தடவைகள் தேர்ந்தெடுக்கப்பட்டார் (1981–1985 மற்றும் 1985–1989). அவ்விரு சந்தர்ப்பங்களிலும், அவர் 95 சத வீத வாக்குகளைப் பெற்றார்.

ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் பிரதமர் நெதன்யாகு ஆகியோரின் பொய்யான கூற்றுகளுக்கு மாறாக, அலி காமெனி ஒரு சர்வாதிகாரி அல்ல என்பது இதன் மூலம் தெளிவாகின்றது.

நான் மேலே குறிப்பிட்டது போல, உலகில் பலருடைய போற்றுதலுக்கு ஆளான பல சிறந்த மனிதர்கள் மேலும் பலருடைய தூற்றுதலுக்கும் இலக்கானது போல, அலி கமேனியும் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.

அலி கமேனியின் மரணம் உறுதி செய்யப்பட்ட பிறகு, துக்கம் அனுசரித்தல் போலவே மகிழ்ச்சி ஆரவாரங்களும் இருக்கத்ததான் செய்தன என்ற போதிலும், வழக்கம்போல மேற்கத்திய ஊடகங்கள் கொண்டாட்டங்களுக்கு மட்டுமே அதிக கவரேஜை கொடுத்தது.

இதே வேளை, ஈரான் மீதான தாக்குதலையும் கமேனியின் படுகொலையையும் ஈரான் ஆதரவு மற்றும் போர் எதிர்ப்பு குழுக்கள் கண்டித்துடன், ஈரான், அமெரிக்கா, ஐரோப்பா, மத்திய கிழக்கு, பாகிஸ்தான் மற்றும் இந்தியாவிலும் போராட்டங்கள் பல நடத்தப்பட்டன. பாகிஸ்தான் போன்ற சில நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகங்களைத் தாக்கப்பட்ட செய்திகளும் வந்தன.

சத்தியம் மற்றும் நியாயத்திற்காக உயிரைத் தியாகம் செய்வது ஒரு உண்மையான முஸ்லிம் ஒரு மாபெரும் பாக்கிமாகவே கருதுவார்.

அது மிக உயர்ந்த வெகுமதிகளை மறுமையில் அளிக்கக்கூடிய ஒரு செயலாகும். அவ்வாறு கொல்லப்பட்ட ஒருவரை இறந்துவிட்டதாகக் கூற வேண்டாம் என்றே திருமறை கூறுகின்றது. இது மனித புரிதலுக்கு அப்பாற்பட்ட உயர்ந்த தளத்தில் இருக்கும் நிலை.

இந்த நிலை புத்தர் அடைந்த ‘பரநிர்வாண’ நிலையைப் போன்றது. இது சாதாரண புலன்களால் உணர முடியாத ஒரு உயர்ந்த நிலையாகும்.

பௌத்த மதத்தின் இந்த நிலைப்பாடு இஸ்லாம் கூறும், மறுமையில் வாக்களிக்கப்பட்டுள்ள சுவர்க்க வாழ்க்கையை சரியாகப் பிரதிபலிக்கவில்லை என்றாலும், அல்லாஹ்வின் பாதையில் உயிர்த் தியாகம் செய்வதன் பயனை ஓரளவேனும் தெளிவு படுத்தவே நான் இதைக் குறிப்பிட்டுள்ளேன்.

மரணம் என்பது மனிதர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் சந்தித்தே ஆகவேண்டிய ஒன்றாகும். ஆனால் எல்லா மரணங்களும் ஒரே மாதிரியானவை அல்ல. நோய் அல்லது வயோதிபம் காரணமாக ஏற்படும் இயற்கை மரணம் மற்றும் நாட்டை காப்பது.

உரிமைகள் மற்றும் உயிர்களை காப்பது போன்ற உயரிய நோக்கங்களுக்காக உயிர்த் தியாகம் செய்வதால் ஏற்படும் மரணம் என இரு வகை மரணங்கள் உண்டு. ஒரு உயரிய குறிக்கோளுக்காக அல்லாஹ்வின் பாதையில் உயிரை தியாகம் செய்வது இஸ்லாத்தின் கண்ணோட்டத்தில் ஒரு மகத்தான செயலாகும்.

அலி கமேனி போன்ற ஒரு இறை விசுவாசமுள்ள ஆண்மிகத் தலைவர் நோய் அல்லது முதுமை காரணமாக படுக்கையில் இறப்பதை விட நாட்டிற்காகவும் நீதிக்காகவும் தனது உயிரைத் தியாகம் செய்யவே அதிகம் ஆசைப்படுவார்.

அடக்குமுறை மற்றும் அநீதியான ஆக்கிரமிப்புக்கு எதிராக தன்னைத் தியாகம் செய்வது ஒரு அருமையான வாய்ப்பாகவே அவர் கருதியிருப்பார்.

ஈரானிய தேசத்திற்கு அவருடைய மரணம் ஒரு பெரிய இழப்பாக இருந்தாலும், அவரை பொறுத்தமட்டில் இது அவருக்கு ஒரு மாபெரும் வெற்றியாகும். சுவனபதியில் உயர்ந்த பதவிகளைத் தரவல்ல ஒரு மகத்தான செயலாகும்.

இதுவே ஒரு உண்மையான விசுவாசியின் உச்சபச்ச இலக்காகும். அதன்படி, அலி கமேனியின் அழிந்து போகும் உடலுக்கு இந்த முடிவு ஏற்பட்டது குறித்து அவருடைய ஆன்மா பெருமகிழ்ச்சி அடையவே செய்யும். யூதர்களின் அட்டூழியங்களால் காசாவில் இறந்த அனைவரின் நிலையும் இதுவே.

சத்தியத்திற்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்யும் ஷஹீதுகளுக்கு சுவனத்தில் பல கன்னிப்பெண்கள் வழங்கப்படுகிறார்கள் என்று இஸ்லாம் கூறுவதை முஸ்லிம் அல்லாத சிலர் கேலி செய்வதால் இது பற்றி சிறிது விளக்குவது பயனுள்ளதாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.குர்ஆனில் இது போல எதுவும் குறிப்பிடப்படவில்லை.

குர்ஆனில் சொர்க்கம் நித்திய மகிழ்ச்சி, பாயும் ஆறுகள் கொண்ட தோட்டங்கள் மற்றும் ஆன்மீக பேரின்பம் என்ற எது எவ்வாறிருந்த போதிலும், மாமனிதரான காமெனியின் கண்ணியத்தைக் கருத்தில் கொண்டு, அவருடைய மறைவிட்க்கு இலங்கை அரசாங்கம் தனது இரங்கலைத் தெரிவிக்க வேண்டும் மற்றும் இறையான்மை உள்ள ஒரு தேசத்தின் தலைவரை படுகொலையை செய்யப்பட்மையை கண்டிக்க வேண்டும்.

அலி கமெனி கையில் வாளுடன் அல்ல, மாறாக வலுவான முதுகெலும்புடன் இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அலி கமெனியின் வீர மரணம் டிரம்ப் போன்ற ஊழல் நிறைந்ததொரு ஏகாதிபத்திய சக்திக்கு எதிராக உறுதியாக நின்ற தைரியத்தையே அடையாளப்படுத்துகின்றது.

இப்போதுள்ள கேள்வி என்னவென்றால், அலி காமேனி போன்ற ஒரு மகத்தான மனிதனின் வாழ்வு மற்றும் துணிச்சலான மரணம் மூலம் எமது அரசு பெறும் படிப்பினை என்னவென்பதே.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

இலங்கையிலுள்ள அமெரிக்கர்களுக்குத் தூதரகம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய சூழ்நிலைக்கு மத்தியில், புதிய பாதுகாப்புத் தகவல்களைப்...

இலங்கை எடுத்துள்ள தீர்மானம் ஆபத்தானது, ஆனால் துணிச்சலானது!

ஈரானுக்குச் சொந்தமான IRIS Bushehr கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் நுழைவதற்கும்,...

ஓமான் வாழ் இலங்கையர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு: ஓமான் வெளிவிவகார அமைச்சருடன் விஜித ஹேரத் கலந்துரையாடல்!

இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் ஓமான் வெளிவிவகார அமைச்சர்...

ஈரானிய வீரர்களை மீட்டது இலங்கையின் சிறந்த வெளியுறவுக் கொள்கையின் அடையாளம்: அலி சப்ரி பாராட்டு

ஈரானிய வீரர்களை மீட்டெடுத்தமை மற்றும் அந்த கப்பலுக்கு இலங்கைக் கடற்பரப்பில் அனுமதி...