நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வரண்ட வானிலை நிலவும்

Date:

இன்றையதினம் (26) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக வரண்ட வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மத்திய, சப்ரகமுவ, ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னலால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மாகாணங்களிலும், அநுராதபுரம், மன்னார், வவுனியா, மொணராகலை மாவட்டங்களின் சில இடங்களிலும் வெப்பக் குறிகாட்டி, அதாவது மனித உடலில் உணரப்படும் வெப்பநிலையானது ‘எச்சரிக்கை மட்டம்’ வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

எனவே தேவையின்றி வெளியில் நடமாடுவதைக் குறைப்தோடு, போதியளவில் நீரை உள்ளெடுத்தல் உள்ளிட்ட போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பிரதானமாக மழையற்ற வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக் கூடும்.

காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

புத்தளத்திலிருந்து மன்னார் ஊடாக காங்கேசந்துறை வரையிலும் மற்றும் மாத்தறையிலிருந்து அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலுமான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

புத்தளத்திலிருந்து மன்னார் ஊடாக காங்கேசந்துறை வரையிலும் மற்றும் மாத்தறையிலிருந்து அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலுமான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகள் அவ்வப்போது மிதமான அலையுடன் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் சாதாரண அலையுடன் காணப்படும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசும், கடல் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

சித்திரவதைக்குள்ளாகும் பலஸ்தீன மருத்துவர் அபு சபியா: இஸ்ரேலுக்கு ஐநா நிபுணர்கள் விடுத்துள்ள அவசர கோரிக்கை.

தடுத்து வைக்கப்பட்டுள்ள பலஸ்தீன மருத்துவர் டாக்டர் ஹுஸாம் அபு சஃபியா (Dr. Hussam...

ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர் இலங்கை வருகை!

இலங்கை அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அழைப்பை ஏற்று, ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர்...

காசாவில் நெஞ்சை உலுக்கும் கொடூரம்: தந்தையை மிரட்ட குழந்தையை சித்திரவதை செய்த இஸ்ரேலியப் படை!

காசா முனையில் நிலவும் போர்ச் சூழலில், மனிதநேயமற்ற முறையில் ஒரு வயதுக்...

சுயதொழில் உபகரணங்கள் மற்றும் கல்வி நிதியுதவி வழங்கி வைப்பு: பஹன மீடியாவின் மற்றுமோர் மனிதாபிமானப் பணி

இலங்கையில் ஊடகப்பணியைத் தாண்டி, சமூக மேம்பாட்டுப் பணிகளிலும் பஹன மீடியா நிறுவனம்...