பிலிப்பைன்சின் நெல் ஆராய்ச்சி நிலையத்திற்கு பிரதமர் விஜயம்

Date:

பிலிப்பைன்சின் சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனத்தை பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய பார்வையிட்டார். ஆசிய அபிவிருத்தி வங்கியின் உத்தியோகபூர்வ அழைப்பிற்கிணங்க பிரதமர் பிலிப்பைன்சின் மனிலா நகரிற்கு விஜயம் செய்துள்ளார்.

இதற்கமைய லொஸ் பெனோஸ் நகரிலுள்ள சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனத்தை பார்வையிட்ட பிரதமர் அதன் அதிகாரிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார். இலங்கை நெற் செய்கை விவசாயிகள் முகம்கொடுக்கும் சவால்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

இலங்கையின் நெல் விளைச்சலை அதிகரித்தல் மற்றும் உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான நவீன தொழில்நுட்பங்கள் உட்பட ஆராய்ச்சி ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதன் சாத்தியக்கூறுகள் குறித்தும் ஆராயப்பட்டது.

Popular

More like this
Related

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...