புகழ்பெற்ற எகிப்திய காரி மஹ்மூத் அல்-ஷஹாத் அன்வருக்கு அங்காராவில் மாபெரும் கௌரவம்

Date:

புனித அல்குர்ஆன் அருளப்பட்ட மாதத்தில் துருக்கி ஜனாதிபதி ரசப் தயிப் அர்தூகான் விடுத்த விசேட அழைப்பின் பேரில், எகிப்தின் புகழ்பெற்ற குர்ஆன் ஓதுபவர் (காரி) மஹ்மூத் அல்-ஷஹாத் அன்வர், அங்காராவில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற இப்தார் நிகழ்வில் கௌரவிக்கப்பட்டார்.

இதன்போது காரி மஹ்மூத் அல்-ஷஹாத் அன்வர் அவர்கள் இறைமறை குர்ஆனின் வசனங்களை மிக இனிமையான குரலில் ஓதினார்.

இந்தச் சந்திப்பின் போது, எகிப்திய முறைப்படி தயாரிக்கப்பட்ட உயரிய ‘மஸ்ஹப் மிஸ்ர்’ (எகிப்திய குர்ஆன் பிரதி) ஒன்றை அர்தூகானுக்கு அவர் பரிசாக வழங்கினார்.

துருக்கி மற்றும் எகிப்து இடையிலான கலாச்சார மற்றும் ஆன்மீக உறவை மேம்படுத்தும் ஒரு நிகழ்வாக இது பார்க்கப்படுகிறது.

‘துருக்கி அதிபரின் மாளிகையில் குர்ஆன் வசனங்களை ஓதியதுடன், எகிப்தின் அடையாளமாகத் திகழும் புனித குர்ஆன் பிரதியை அவருக்கு வழங்கியதில் மிக்க மகிழ்ச்சி’ என காரி மஹ்மூத் அல்-ஷஹாத் அன்வர் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

ரமழானில் இறுதி பத்து: பிக்ஹுல் இஃதிகாப்!

-முஹம்மத் பகீஹுத்தீன் இஃதிகாப் என்றால் என்ன? பொது வாழ்வின் சந்தடிகளை விட்டு தூரமாகி, அல்லாஹ்வை...

மத்திய கிழக்கு மோதல்: உலகளாவிய கச்சா எண்ணெய் விலையில் கடும் உயர்வு – EIA வெளியிட்ட அதிரடி அறிக்கை!

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழலுக்கு மத்தியில், அமெரிக்க எரிசக்தி தகவல்...

ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டால் உலகளாவிய ரீதியில் வாழ்க்கைச் செலவு அதிகரிக்கக்கூடும் : ஐ.நா சபை எச்சரிக்கை!

மத்திய கிழக்கின் முக்கிய கடல் போக்குவரத்துப் பாதையான ஹோர்முஸ் நீரிணை (Strait...

ஈரான் அரசாங்கம் கோரிக்கை விடுத்தால் சடலங்களை ஒப்படைக்கத் தயார்: அமைச்சரவைப் பேச்சாளர்

அமெரிக்காவின் தாக்குதலால் விபத்துக்குள்ளான IRIS DENA கப்பலிலிருந்து மீட்கப்பட்ட சடலங்களை ஒப்படைக்குமாறு...