அதிகரித்துள்ள லிட்ரோ சமையல் எரிவாயு விலை: புதிய விலைப்பட்டியல்

Date:

உள்நாட்டு சமையல் எரிவாயு விற்பனை நிறுவனங்களான லிட்ரோ கேஸ் நிறுவனமும், லாஃப்ஸ் கேஸ் நிறுவனமும் நேற்று (05) நள்ளிரவு அமுலுக்கு வரும் வகையில் விலையில் திருத்தம் மேற்கொண்டுள்ளன.

லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனம், 12.5 கிலோ சிலிண்டரின் விலையினை 775 ரூபாவினால் உயர்த்தியுள்ளது – புதிய விலை 4,765 ரூபாவாகும்.

5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 308 உயர்த்தப்பட்டுள்ளது – புதிய விலை 1,910 ரூபாவாகும்.

2.3 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 140 ரூபாவினால் உயர்த்தப்பட்டுள்ளது – புதிய விலை 890 ரூபாவாகும்.

லாஃப்ஸ் கேஸ் நிறுவனம், 12.5 கிலோ சிலிண்டரின் விலையினை 1,070 ரூபாவினால் உயர்த்தியுள்ளது – புதிய விலை 5,700 ரூபாவாகும்.

5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 418 உயர்த்தப்பட்டுள்ளது – புதிய விலை 2,280 ரூபாவாகும்.

உலகளாவிய சந்தை நிலவரங்களை உன்னிப்பாகக் கண்காணித்து இந்த விலை ஏற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Popular

More like this
Related

அல்குர்ஆன் வசனங்களின் எழில்மிகு வடிவங்கள்:தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் அல்-குர்ஆனிய அறிவியல் அரபு எழுத்தணி போட்டி மற்றும் கண்காட்சி!

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அரபு மொழிப் பீடத்தின்...

காசாவில் இஸ்ரேலின் தீவிர வான் தாக்குதல்: ஹமாஸ் ஆயுதப்பிரிவு தளபதி இஸ் அல்-தின் அல்-ஹத்தாத் குறிவைப்பு!

மேற்கு காசா நகரிலுள்ள ரிமால் பகுதியில் இஸ்ரேல் நடத்திய அடுத்தடுத்த வான்வழித்...

78 ஆண்டுகால நக்பா பேரவலம்: பூர்வீக நிலத்திற்காக ஏங்கும் பாலஸ்தீனர்கள்!

மே 15, பாலஸ்தீன வரலாற்றில் என்றும் மறக்க முடியாத ஒரு கருப்பு...

இறக்குமதி வாகனங்களுக்கான இறக்குமதி சுங்க வரியில் மாற்றம்

இறக்குமதி வாகனங்களுக்கான இறக்குமதி சுங்க வரி மறுசீரமைக்கப்பட்டுள்ளது. இறக்குமதி தீர்வை வரி...