இரண்டு மாதங்களில் 1,480 மில்லியன் டொலர் வருமானம்!

Date:

இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் இலங்கையின் வெளிநாட்டுத் தொழிலாளர் பணப்பரிமாற்றம் (Remittances) 1,480.1 மில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளதாக மத்திய வங்கி அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டின் ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் நாட்டுக்கு அனுப்பப்பட்ட 1,121.1 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்துடன் ஒப்பிடுகையில், இது 32% வளர்ச்சியாகும்.

பெப்ரவரி மாத வளர்ச்சி: இந்த ஆண்டின் பெப்ரவரி மாதத்தில் மாத்திரம் 729 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானமாகப் கிடைத்துள்ளது. இது கடந்த 2025ஆம் ஆண்டின் பெப்ரவரி மாதத்தில் கிடைத்த 548.1 மில்லியன் அமெரிக்க டொலர்களுடன் ஒப்பிடுகையில் 33% வளர்ச்சியாகும் என இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

வெளிநாட்டுத் தொழிலாளர்களின் பணப்பரிமாற்றத்தில் அண்மைய மாதங்களில் அவதானிக்கப்பட்ட நேர்மறையான போக்கு, 2026ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்திலும் தொடர்வதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

ஆரிகாமம் மஸ்ஜித் விவகாரம்: சமூக ஊடக வதந்திகளுக்கு பள்ளிவாசல் நிர்வாகம் அதிகாரப்பூர்வ தெளிவறிக்கை!

கடந்த 24.06.2026 முதல் சமூக ஊடகங்களில் ஆரிகாமம் மஸ்ஜித் தொடர்பாகப் பரப்பப்பட்டு...

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 66,064 ஆக அதிகரிப்பு

இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 66,064...

அங்காரா நேட்டோ உச்சிமாநாடு 2026: உலகளாவிய பாதுகாப்பு சவால்களுக்கு மத்தியில் முக்கிய முடிவுகள்!

உலகளாவிய அரசியல் மற்றும் பாதுகாப்புச் சூழலில் பெரும் நிச்சயமற்றத்தன்மை நிலவி வரும்...