Wednesday, November 25, 2026

இலங்கையின் ஏற்றுமதி வருமானம் 1.59% அதிகரிப்பு

1 min read · 1 reads

2026 ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் ஏற்றுமதி வருமானத்தில் சரிவு காணப்பட்ட போதிலும், ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் இலங்கையின் ஏற்றுமதி செயல்திறன் வலுவாக உள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

ஜனவரி முதல் மார்ச் வரையிலான மொத்த ஏற்றுமதி வருமானம் 4,308.11 மில்லியன் அமெரிக்க டொலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2025 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 1.59% வளர்ச்சியாகும்.

மார்ச் மாதத்தின் மொத்த ஏற்றுமதி வருமானம் 1,467.31 மில்லியன் டொலர்களாகும். இது 2025 மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் 5.2% வீழ்ச்சியாக இருந்தாலும், பெப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் 9.0% மாதாந்த வளர்ச்சியாகும்.

உலக சந்தை சவால்களுக்கு மத்தியிலும் ஏற்றுமதித் துறை நிலைப்புத்தன்மையுடன் இருப்பதாக ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் (EDB) தலைவர் மங்கள விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

சந்தை பல்வகைப்படுத்தல் மற்றும் வர்த்தக வசதிகளை மேம்படுத்துவதன் மூலம் 2026 ஆம் ஆண்டின் வருடாந்த இலக்குகளை அடைய முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

கருத்துக்கள் Comments

இன்னும் கருத்துக்கள் இல்லை – முதல் கருத்தை நீங்கள் எழுதுங்கள். No comments yet – be the first.

உங்கள் கருத்தைப் பகிருங்கள் Leave a comment

Your email is not shown. Comments appear after an editor checks them.