ஏயார்பஸ் ஊழல் விவகாரம்: ஷமீந்திர ராஜபக்ச, பிரியங்கா விஜேநாயக்க ஆகியோருக்கு நீதிமன்றம் பிடியாணை!

Date:

ஸ்ரீலங்கன் எயார்பஸ் கொள்வனவின் போது கையூட்டல் பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்களாகப் பெயரிடப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்சவின் மகன் ஷமீந்திர ராஜபக்ச மற்றும் கபில சந்திரசேனவின் மனைவி பிரியங்கா நியோமாலி விஜேநாயக்க ஆகியோரைக் கைது செய்ய கொழும்பு நீதவான் நீதிமன்றம் திறந்த பிடியாணை உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழு விடுத்த கோரிக்கையை பரிசீலித்த கொழும்பு மேலதிக நீதவான் அசங்க எஸ். போதரகம,  சந்தேகநபர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு இந்த உத்தரவை வழங்கினார்.

 

இந்த உத்தரவை இலங்கையிலுள்ள அனைத்து வானூர்தி நிலையங்களுக்கும் அனுப்பி வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

 

சந்தேகநபர்கள் இலங்கைக்கு வருகை தந்தால், அவர்களை உடனடியாகக் கைது செய்து கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவிடம் ஒப்படைக்குமாறு குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்காக எயார்பஸ் வானூர்திகளை கொள்வனவு செய்த கொடுக்கல் வாங்கல்களின் போது பாரியளவிலான நிதி முறைகேடுகள் மற்றும் கையூட்டல் பெறப்பட்டதாக நீண்டகாலமாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ளதாகக் கருதப்படும் குறித்த சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காகவே இந்தத் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

பெரும்பான்மையை ஏற்றுக் கொண்டார் ஆளுநர்: த.வெ.க. தலைவர் விஜய் நாளை தமிழக முதல்வராக பதவியேற்கிறார்.

தமிழக வெற்றிக் கழகத்திற்கு காங்கிரஸ், இரண்டு இடது சாரிகள், விசிக, ஐ.யு.எம்.எல்....

ஐயூஎம்எல் ஆதரவு: தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!

தவெக ஆட்சியமைக்க இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி நிபந்தனையற்ற ஆதரவு...

அதிகரிக்கும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 9 லட்சத்திற்கும் அதிக சுற்றுலாப் பயணிகள்...

வியட்நாம் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் நிறைவு

இலங்கைக்கான அரச விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த வியட்நாம் சோசலிசக் குடியரசின்...