கிரீஸில் 15 வயதுக்குட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகப் பயன்பாடுக்கு தடை!

Date:

2027 ஜனவரி 1 ஆம் திகதி முதல் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு கிரீஸ் தடை விதிக்கும் என்று கிரேக்கக் குடியரசின் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாக்கிஸ் இன்று தெரிவித்துள்ளார்.

சிறுவர்களிடையே அதிகரித்து வரும் பதற்றம், தூக்கப் பிரச்சனைகள் மற்றும் இணையத் தளங்களுக்கு அடிமையாகும் தன்மை ஆகியவற்றை கருத்திற் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

இந்த தடையினை நாட்டிலுள்ள சுமார் 80 சதவீதம் பேர் ஆதரித்துள்ளதாக கிரீஸில் உள்ள கருத்துக் கணிப்பு ஆய்வு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

கிரேக்க அரசாங்கம் ஏற்கனவே பாடசாலைகளில் மாணவர்களிடத்தில் மொபைல் பாவனையை தடை செய்துள்ளதுடன், பதின்ம வயதினரின் திரை நேரத்தைக் கட்டுப்படுத்த பெற்றோர் கட்டுப்பாட்டுத் தளங்களையும் அமைத்துள்ளது.

கடந்த ஆண்டு 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களை அணுகுவதைத் தடுத்த உலகின் முதல் நாடாக அவுஸ்திரேலியா மாறியது.

அதையடுத்து, சுலோவீனியா, இங்கிலாந்து, ஆஸ்திரியா மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளும் இதேபோன்ற தடைகளை விதிக்கும் பணியில் தற்சமயம் ஈடுபட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

பாடசாலைகளில் முன்னெடுக்கப்படும் விழாக்களை எளிமையான நடத்துங்கள்: கல்வி அமைச்சு

பாடசாலைகளில் முன்னெடுக்கப்படும் பல்வேறு விழாக்கள் மற்றும் கொண்டாட்டங்களுக்கு முன்னைய அறிவுறுத்தல்களைப் புறக்கணித்து...

கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் பாகிஸ்தான் இஸ்லாமிய பல்கலைக்கழகம் இடையே புதிய கல்விசார் ஒத்துழைப்பு

சர்வதேச ரீதியிலான கல்வித் தொடர்புகளை விரிவுபடுத்தும் நோக்கில், கொழும்பு பல்கலைக்கழகம்...

விடுமுறை காலச் சுற்றுலாக்களின் போது முஸ்லிம் சமூகம் பேண வேண்டிய ஒழுக்கக்கோவைகள்: உலமா சபை விசேட வழிகாட்டல்கள்

விடுமுறை காலங் களில் மேற்கொள்ளப் படும் சுற்றுலாக்கள் மற்றும் பயணங்களின் போது...

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து இலங்கைக்கு 700 மில்லியன் டொலர்கள் நிதியுதவி!

நான்காண்டு கால நீட்டிக்கப்பட்ட நிதி வசதி (EFF) ஏற்பாட்டின் கீழ், ஐந்தாவது...