இலங்கைக்கான சேவையை ஆரம்பிக்கும் குவைத் ஏர்வேஸ்!

Date:

குவைத்தின் தேசிய விமான நிறுவனமான குவைத் ஏர்வேஸ், எதிர்வரும் ஏப்ரல் 15 முதல் இலங்கையின் கொழும்புக்கு நேரடி விமானச் சேவைகளைத் தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

இந்தப் புதிய சேவை, இரு நாடுகளுக்கும் இடையேயான விமான இணைப்பை வலுப்படுத்தி, சிறந்த பயண வாய்ப்புகளை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விமான நிறுவனத்தின் தகவலின்படி, வாரந்தோறும் புதன்கிழமைகளில் விமானங்கள் இயக்கப்படும்.

குவையிலிருந்து பிற்பகல் 01:30 மணிக்கு புறப்பட்டு, மாலை 06.05 மணியளவில் கொழும்பை வந்தடையும்.

அதே சமயம், கொழும்பிலிருந்து இரவு 07.05 மணிக்கு புறப்பட்டும் விமானம் மறுநாள் அதிகாலை 03:30 மணிக்கு குவந்தை சென்றடையும்.

விமான நிறுவனம், வர்த்தகக் கூட்டாளர்களையும் பயணிகளையும் முன்பதிவுகள் மற்றும் விசாரணைகளுக்காக அதன் கொழும்பு விற்பனைக் குழுவை cmbrr.gsa@kuwaitairways.com, 011 2272142 / 011 2272143, அல்லது +94 77 275 6420 வழியாகத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

Popular

More like this
Related

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 66,064 ஆக அதிகரிப்பு

இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 66,064...

அங்காரா நேட்டோ உச்சிமாநாடு 2026: உலகளாவிய பாதுகாப்பு சவால்களுக்கு மத்தியில் முக்கிய முடிவுகள்!

உலகளாவிய அரசியல் மற்றும் பாதுகாப்புச் சூழலில் பெரும் நிச்சயமற்றத்தன்மை நிலவி வரும்...

அன்று ஹிஜாப் அணிந்த துருக்கி பெண் அமைச்சரை சிறைபிடித்து துரத்திய நெதர்லாந்து: 2017 அவமதிப்புக்கு 2026-ல் துருக்கி கொடுத்த தரமான பதிலடி

துருக்கி ஜனாதிபதி ரெசப் தயிப் அர்தூகானின் தீர்க்கமான இராஜதந்திரம் மற்றும் அவரது...